தவெக பனையூர் அலுவலகத்திற்கு நடிகை திரிஷா திடீர் விசிட்.. போட்டோஸ்!
நடிகை திரிஷா, தவெக கட்சி தலைவர் விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு திடீர் வருகை தந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 84.69 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. வாக்கு பதிவை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் இன்று மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை காலை முதல் விறுவிறுப்புடன் தொடங்கியது. எந்த கட்சி ஆட்சியை பிடிக்கப்போகிறது? ஆளும் கட்சியா? எதிர்கட்சியா? இல்லை கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகள் ஆன விஜய் ஆட்சி பிடிப்பாரா? என பெரும் எதிர்பார்ப்புடன் எண்ணிக்கை நடைபெற்றது.
இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் விஜய்யின் தவெக கட்சி 100க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் கட்சியான திமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் அதிமுக 60க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து இரண்டாம் இடத்தில் உள்ளது.
பெரும்பாலான தொகுதிகளில் விஜய்யின் தவெக கட்சி முன்னிலை வகிப்பதால் தவெக வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று 42வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகை திரிஷா, திருப்பதியில் சாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.
திருப்பதியில் இருந்து சென்னை வந்தடைந்த நடிகை திரிஷா, பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்திக்கு திடீர் வருகை தந்துள்ளார். த்ரிஷாவின் இந்த திடீர் வருகை பெரும் பேசுபொருளாகியுள்ளது. தற்போது இந்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications