Home / Photos
PHOTOS: வனிதாவின் இரண்டாவது மகளா இது? அடுத்த ஹீரோயின் ரெடி போல.. கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்ஸ்!
By Chandru
சர்ச்சையான பேச்சுக்களால் அடிக்கடி நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார். போறபோக்கில் எதையாவது ஒரு கருத்தை வெளியிட்டு கன்டென்ட் ராணியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் வனிதா விஜயகுமார்.
1/7
Photo Credit: instagram
Share
சர்ச்சையான பேச்சுக்களால் அடிக்கடி நெட்டிசன்களால் விமர்சிக்கப்படுபவர் நடிகை வனிதா விஜயகுமார். போறபோக்கில் எதையாவது ஒரு கருத்தை வெளியிட்டு கன்டென்ட் ராணியாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் வனிதா விஜயகுமார்.
2/7
Photo Credit: instagram
Share
தமிழில் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்திருக்கும் வனிதா சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமானவர். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் விஜய் டிவியின் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்துகொண்டார்.
3/7
Photo Credit: instagram
Share
பொதுவெளியில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று வனிதா பேசுவது போல் பிக் பாஸ் வீட்டிலும் தனது தடாலடி பேச்சுக்களால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இன்னும் சொல்லப்போனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் வனிதாவை கண்டு மிரண்டுபோயினர் என்றே சொல்லலாம்..
4/7
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் மூலம் மிகவும் பிரபலமான வனிதா, பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் சில நாட்களே நீடித்து என்றே சொல்லலாம். இவரின் திருமணம் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
5/7
Photo Credit: instagram
Share
பின்னர் வனிதா, அதே விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்குபெற்றார். வெறும் வாய் மட்டும் இல்லை செயலிலும் சூப்பர் சென்று சொல்வது போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார்.
6/7
Photo Credit: instagram
Share
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ஜோடிகள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும், போட்டியாளராகவும் பங்கேற்று வந்தார். நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த வனிதாவுக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
7/7
Photo Credit: instagram
Share
டிவி நிகழ்ச்சிகளை ஓரம் வைத்துவிட்டு தற்போது நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் வனிதா, தனது இரண்டாவது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது வனிதாவின் புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் அடுத்த ஹீரோயின் ரெடி ஆயாச்சு போலயே என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications