Home / Photos
'காதல்' படத்திற்கு முதல் சாய்ஸ் சந்தியா இல்லையாம்? செலக்டான வாரிசு நடிகை.. யாருன்னு தெரியுமா?
By Chandru
தமிழ் சினிமாவின் பிரபலமான படங்களில் ஒன்று காதல் திரைப்படம். இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சந்தியா தேர்வாகவில்லையாம் பிரபல நடிகரின் வாரிசு தான் முதலில் செல்கட் செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
1/7
Share
காதல் படத்தை மறக்கமுடியுமா. பல விதமான காதல் கதை படங்கள் வந்தாலும் நடிகர் பரத்தின் காதல் படத்தை அடுச்சுக்கமுடியாது என்றே சொல்லலாம். இன்றளவும் மவுசு குறையாமல் பெரும்பாலானோரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
2/7
Share
பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவரின் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் காதல். நடிகர் பரத், சந்தியா நடிப்பில் வெளியான இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாக கொண்டே எடுக்கப்பட்டது.
3/7
Share
காதல் என்றாலே அது இறுதியில் திருமணத்தில் தான் முடியும் என்றிருந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே அமோக வரேவேற்பை பெற்றது.
4/7
Share
பரத், சந்தியாவின் எதார்த்தமான நடிப்பு படத்தின் வெற்றிக்கு வலுசேர்த்தது. அருப்புதமான திரைக்கதை ரசிகர்களை அதிகம் ஈர்த்து. குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வந்து படம் பார்த்தனர் ரசிகர்கள்.
5/7
Share
பொதுவாகவே திரைப்படங்களில் காதல் என்றால் அது திருமணத்தில் தான் முடியும். ஆனால் இப்படத்தில் காதலி வேறொருவனை திருமணம் செய்துகொள்ள மனம்தாங்காமல் காதலன் பித்துப்பிடுச்சுப்போய் பைத்தியக்காரனாய் ரோட்டில் பேச்சை எடுத்துக்கொண்டிருப்பேன். படத்தின் வெற்றியே இந்த க்ளைமேக்ஸில் தான் இருந்தது. இப்படியாக இப்படத்தை பற்றி பேசிக்கொண்டே போகலாம்.
6/7
Share
தற்போது இப்படத்தின் சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆதாவது இப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சந்தியாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என கூறுகின்றனர். முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தான் என கூறுகின்றனர்.
7/7
Share
ஆம், பரத்துக்கு ஜோடியாக நடிக்க முதலில் வரலட்சுமிக்கு தான் வாய்ப்பு கிடைத்து. ஆனால் இப்படத்தை அவர் மிஸ் செய்துவிட்டார் சந்தியாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் சந்தியா நடிக்கும் பொது அவர் 10ம் வகுப்பு தான் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications