Home / Photos
ரம்யா பாண்டியனை போலவே மொட்டை மாடி போட்டோஷூட்.. 'சென்னை 28' பட நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
By Divya Bala
நடிகை விஜயலட்சுமிசென்னை 28 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் மொட்டை மாடியில் நடிகை ரம்யா பாண்டியன் போட்டோஸ் எடுத்து வைரல் ஆனது போல இவரது புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது.
1/7
Share
பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது.
2/7
Share
விஜயலட்சுமி என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்பட இயக்குநரான அகத்தியனின் மகளாவார். அஞ்சாதே, அதே நேரம் அதே இடம் போன்ற பத்து திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் ஒன்று கன்னடத் திரைப்படமாகும்.
3/7
Share
ஒரு சில படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றிய பிறகு, அவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் மாறினார். விஜயலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் பணியை தொடங்கினார்.
4/7
Share
பிறகு அவரது பால்ய நண்பரான வெங்கட் பிரபுவின் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் தடம் பதித்தார். இந்த திரைப்படம் உள்ளூர் துடுப்பாட்ட அணியின் கதையை விவரிக்கும் திரைப்படமாகும். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
5/7
Share
இவரது நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த அதே நேரம் அதே இடம், 2010 ஆம் ஆண்டின் கற்றது களவு ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. 2008 ஆம்ஆண்டு சூலையில் சவுந்தர்யா ரஜினிகாந்த்தின் இயக்கத்தில் சுல்தான் த வாரியர் திரைப்படத்தில் இலியானா டி குரூஸ் விலகிய பின் அவரது கதாபாத்திரத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமானார்.
6/7
Share
விஜயலட்சுமி மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் அனிமேஷன் பதிப்பைக் கொண்டிருப்பார் என்றும் கதாபாத்திரத்திற்கான குரல் பதிவை அவரே மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த திரைப்படம் ஹாரா என்று மறு பெயரிடப்பட்டது.
7/7
Share
2013 ஆம் ஆண்டில் கடத்தல்காரன் வீரப்பனின் கதையை சித்தரித்து வெளியிடப்பட்ட இருமொழி திரைப்படமான அட்டாஹாசா என்ற திரைப்படத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி என்பவரின் கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் தற்போது மொட்டைமாடியில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது


Click it and Unblock the Notifications