Home / Photos
இவர்தான் வருங்கால கணவரா? நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்ட வினுஷா தேவி!
By Divya Bala
விஜய் டிவி சீரியலில் அறிமுகமாகி பிரபலமானவர் வினுஷா தேவி. இவர் தற்போது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
1/5
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகத்தில், ரோஷினி ஹரிப்ரியாவுக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்தார். ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
2/5
Photo Credit: Instagram
Share
டிக்டாக் மற்றும் மாடலிங் மூலம் கவனம் பெற்ற வினுஷா, சின்னத்திரையில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார். N4 திரைப்படத்தில் கபீரியல்லாவுடன் இணைந்து நடித்ததுடன், பனி விழும் மலர்வனம் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
3/5
Photo Credit: Instagram
Share
தற்போது வினுஷா தேவி, லிங்கேஸ்வரன் என்பவருடன் கடந்த ஜூன் 17-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் எளிமையாக நடைபெற்ற இந்த விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
4/5
Photo Credit: Instagram
Share
லிங்கேஸ்வரன் குறித்து இதுவரை அதிக தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், நிச்சயதார்த்த புகைப்படங்களை வினுஷா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
5/5
Photo Credit: Instagram
Share
காதலருடன் க்யூட்டாக போஸ் கொடுத்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் பலரும், "அழகான ஜோடி", "வாழ்த்துகள்" என கமெண்ட் செய்து தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications