சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் திரைப்படங்கள்.. என்னென்ன? முழு லிஸ்ட்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளைத்திரையில் அறிமுகமாகி அதில் வெற்றி கண்டவர்கள் வெகு சிலரே, அதில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் கலக்கிக்கொண்டிருந்த சிவா, 2012ல் வெளியான 'மெரினா' படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து வெவ்வேறு படங்கள் தேடி வர ஏராளமான ஹிட் படங்கள் கொடுத்தது ஸ்டார் நடிகராக ஜொலிக்கத் தொடங்கினார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிவாவை நம்ம வீட்டு பிள்ளைகளில் ஒருவராக கொண்டாடி வருகின்றனர். குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவான சிவா நடிப்பில் இறுதியாக வெளியான படம் 'அமரன்'. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ஸ்டார் இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மதராஸி'. சிவாவுடன், ருக்மினி வசந்த், விக்ராந்த், பிஜு மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. வரும் செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியாகவுள்ளது.
மதராஸி முடிந்த கையேடு பராசக்தி படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இறுதிச்சுற்று, சூரரை போற்று போன்ற ஹிட் படங்களை கொடுத்த சுதா கொங்கரா இயக்கத்தில் சிவா நடித்து வருகிறார். மேலும் சிவாவுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் பலர் நடித்து வருகின்றனர். 1960களில் தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போர் அதனை சுற்றி நடந்த அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் 2026 பொங்கலுக்கு கோலாகலமாக ரிலீசாகவுள்ளது.
சுதா கொங்கராவை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். விஜயை வைத்து கோட் என்ற ஹிட் படத்தை கொடுத்த வெங்கட், சிவாவை வைத்து அடுத்த சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க ரெடியாகியுள்ளார். இப்படம் டைம் டிராவல் கதைக்களத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் காயத்ரி சங்கர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர்.
வெங்கட் பிரபுவை தொடர்ந்து தனது 24வது படத்தை மலையாள ஸ்டார் நடிகர் மோகன்லாலுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் சிவா. இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மோகன்லால் கூட்டணியில் இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. இன்னும் அதிகாரபூர்வமான தகவல் வெளியக்காவிட்டாலும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications