Home / Photos
உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும் மூலிகை சீந்தலின் நன்மைகள்..!!
ஆயுர்வேதத்தில் நச்சு நீக்கும் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் தாவரமாக கூறப்படுகின்ற மூலிகை சீந்தல் கொடியின் பயன்பாடுகள் குறித்து சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1/8
Share
அமிர்தவல்லி, சோமவல்லி எனப்படும் சீந்தல் (Guduchi, Giloy) தாவரம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இது மிகவும் உயரமான பகுதிகளில் பற்றி படர்ந்து வளரக் கூடியதாகும். இந்த மூலிகையில் புரதம், இரும்பு, ஜிங்க், காப்பர், கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகியவை அடங்கியுள்ளன.
2/8
Share
ஆயுர்வேதத்தில் சீந்திலின் வேர், தண்டு மற்றும் இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைகள் உடலிலுள்ள கழிவுகள் மற்றும் பாக்டீரியாக்களை வெளியேற்றி, உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. அதோடு, இரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
3/8
Share
இது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மன அழுத்தத்தை குறைக்கவும், மனதை அமைதிப்படுத்தவும், நினைவாற்றலை அதிகரிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த அமிர்தவல்லியை பயன்படுத்துகிறார்கள்.
4/8
Share
டெங்கு, பன்றி காய்ச்சல், மலேரியாவிற்கும் மருந்தாக பயன்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி குடல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதில் பங்களிக்கிறது. சிறிது நெல்லிக்காய் அல்லது சர்க்கரையுடன் அரை கிராம் சீந்தில் பொடியை சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும்.
5/8
Share
இது கல்லீரல் நோய்களையும், சிறுநீரக நோய்த்தொற்றுகளையும் கட்டுப்படுத்துகிறது. பாலியல் குறைபாடுகளை சரி செய்து விந்தணு உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும், கருவுறாமை சிகிச்சையில் பயனளிக்கிறது.
6/8
Share
இதன் இலைகளில் இருந்து சாறு எடுத்து குடிப்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். ஆனால் இந்த இலைகளின் சாற்றை நேரடியாக உட்கொள்ளாமல், தண்ணீரில் கலந்தே குடிக்க வேண்டும். அதுவும் 6 வாரங்களுக்கு மேல் குடிக்கக்கூடாது.
7/8
Share
சீந்தில் சாறு, இரத்த சர்க்கரை குறைப்பானாக செயல்பட்டு நீரிழிவு நோயை (டைப் 2 நீரிழிவு) குணப்படுத்த உதவுகிறது. சீந்தில் தண்டின் பொடியை பால்சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொண்டால் மூட்டு வலி நீங்கிவிடும். மேலும் இஞ்சியோடு சேர்த்து சாப்பிட முடக்கு வாத பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கும்.
8/8
Share
சீந்தில் வேரை மென்று சாப்பிடுவது அல்லது அதன் சாறு குடிப்பது, இருமல், ஆஸ்துமா, மார்பு இறுக்கம் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை குணப்படுத்துவதாக ஆயுவேதத்தில் கூறப்படுகிறது. சீந்திலை மருந்தாக எடுத்துக் கொள்வதற்கு முன் ஆயுர்வேத மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.


Click it and Unblock the Notifications