OTT: அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகும் திரைப்படங்கள்.. என்னென்ன பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் அமேசான் பிரைம் ஓ டிடி தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள் என்னென்ன? இந்த வீக் எண்டு என்ன பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹாரர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ஹாலிவுட் திரைப்படம் 'The Carpenter's Son'. இந்த திகில் படம் கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ரொமான்டிக், அட்வென்ச்சர், ஃபேண்டஸி அனிமேஷன் திரைப்படம் 'Chainsaw Man - The Movie: Reze Arc'. இப்படம் கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
பாக்சிங் வீராங்கனை கிறிஸ்டி மார்ட்டின் பற்றிய பயோகிராஃபி திரைப்படம் 'Christy'. இப்படம் கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், காமெடி, ரொமான்ஸ் ஜானரில் உருவான திரைப்படம் 'Die My Love'. இப்படம் கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், மிஸ்ட்ரி திரைப்படம் 'Keeper'. திகில் நிறைந்த இந்த திரில்லர் படம் கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ஜெர்மன் இசைக்கலைஞர் வேரா பிராண்டஸ் பற்றிய பயோகிராஃபி திரைப்படம் 'Köln 75'. இப்படம், கடந்த 9ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'Merv'. பெண்ணுக்கும் செல்லப்பிராணி நாய்க்கும் இடையே இருக்கும் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், நேற்று 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸானது.
ரொமான்டிக், திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இஸ்பானீஷ் திரைப்படம் 'Tell Me Softly'. ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நாளை 12ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸாகவுள்ளது.


Click it and Unblock the Notifications