அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில்.. ட்ரெண்டிங்கில் உள்ள டாப் 6 படங்கள், வெப் சீரிஸ்.. என்னென்ன? லிஸ்ட்!
ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ள டாப் 6 திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் வெப் தொடர் 'Steal'. அலுவலகத்தை சுற்றிவளைத்து பணியாளர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் கொள்ளையர்களிடம் இருந்து அனைவரும் எப்படி தப்பிக்கின்றனர் என்பதே இத்தொடரின் சுவாரசியமான கதைக்களம். இந்த ட்ரெண்டிங் பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ள இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஹிந்தியில் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் பிரியாடிக் திரைப்படம் '120 Bahadur'. லடாக் பகுதியில்1962ல் நிகழ்ந்த சீனா-இந்தியா போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த ட்ரெண்டிங் பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ள இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சோபிதா முதன்மை ரோலில் நடித்து உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Cheekatilo'. பெண்களை கற்பழித்து கொல்லும் சீரியல் கொலையாளியை பற்றிய த்ரில் திரைப்படம். சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படம் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது. அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆக்ஷன், காமெடி, க்ரைம் கதைக்களத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் 'The Wrecking Crew'. WWE வீரர்கள் டேவ் பாடிஸ்டா, ஜேசன் மோமோவா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இப்படம் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
கார்த்தி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'வா வாத்தியார்'. தியேட்டரில் கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், அமேசான் பிரைம் ட்ரெண்டிங்கில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ஹிந்தி வெப் தொடர் 'Daldal'. இத்தொடரின் முதல் சீசன் அமேசான் பிரைம் தளத்தில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்று ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இத்தொடரை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications