Home / Photos
அம்பானி குடும்பத்தில் அதிகம் படித்தது யார்? புது மாப்பிள்ளை முதல் மருமகள்கள் வரை யாரு படிப்பில் டாப்.. சூப்பர் லிஸ்ட் இதோ!
By Chandru
அம்பானி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன கல்வி தகுதி வைத்துள்ளனர் என்பதை இந்த பதிவில் டீடைலாக பார்ப்போம்.
1/10
Share
இம்மாதம் தொடங்கிய முதலே எங்க பார்த்தாலும், யார்கிட்ட பேசினாலும், முகேஷ் அம்பானியின் இளைய மகனின் ப்ரீ வெட்டிங் பத்திதான் உலகமே ஓஹோன்னு பேசிகிட்டு இருக்கு. சாப்பாட்டுக்கு இவ்வளவு கோடி, டான்ஸ் ஆடுறதுக்கு இத்தனை கோடி என கோடி ரூபாய்களை தனது மகனுக்காக தண்ணீயாக செலவு செய்துள்ளார் இந்தியாவின் டாப் பணக்காரர் முகேஷ் அம்பானி.
2/10
Share
பிரமாண்டமான ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் பெட்ரோல் பங், ஜியோ தொலைத்தொடர்பு, AJIO உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து ரிலையன்ஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக இருப்பவர் இவரின் மனைவி நீதா அம்பானி.
3/10
Share
1985ம் ஆண்டு நீதாவை திருமணம் செய்துகொண்டார் முகேஷ் அம்பானி. இவர்களுக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானிக்கு திருமணம் முடிந்துவிட்டது. தற்போது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் தடபுடலாக ப்ரீ வெட்டிங் நடைபெற்றது.
4/10
Share
வெறும் ப்ரீ வெட்டிங்குக்கு மட்டுமே 900 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் இனி ஜூலை மாதத்தில் நடக்க இருக்கும் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படியாக அம்பானி வீட்டு விஷேஷம் உலகையே திரும்பிப்பார்க்கவைத்துள்ளது.
5/10
Share
பொதுவாகவே எல்லோருக்கும் ஒரு டவுட் இருக்கும். கோடீஸ்வரர்கள் இவர்களின் கல்வி தகுதி என்னாவா இருக்கும்? எங்க படுசுறுப்பாங்க ? என்ன படுசுறுப்பாங்க? என்பதை தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். அதன்படி அம்பானி வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் என்னென்ன கல்வி தகுதி உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போ..
6/10
Share
மும்பை பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்ட படிப்பை முடித்துக்கொண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் MBA படிப்பையும் முடித்தார் முகேஷ் அம்பானி. இவரின் மனைவி நீதா அம்பானி, மும்பையில் உள்ள நர்சி மோஞ்சி வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் படித்துள்ளார். மேலும் இவர் பரதநாட்டியத்தில் கைத்தேர்ந்தவராம்.
7/10
Share
ஆகாஷ் அம்பானி, அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரின் மனைவி ஷ்லோகா மேத்தா, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டமும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பும் படித்துள்ளார்.
8/10
Share
இஷா அம்பானி, உளவியல் படிப்பில் பட்டம் பெற்றவர். அதேபோல் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் MBA முடித்துள்ளார். இவரின் கணவர் ஆனந்த் பிரமல், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பு படித்துள்ளார்.
9/10
Share
இறுதியாக புதுமாப்பிள்ளை ஆனந்த் அம்பானி, அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரின் மனைவி ராதிகா மெர்ச்சண்ட், நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுள்ளார். இவரும் பரதநாட்டியத்தில் கைத்தேர்ந்தவர்.


Click it and Unblock the Notifications