61 வயதில் 3வது திருமணம் செய்துகொண்ட அமீர்கான்.. புலம்பி தள்ளும் 90ஸ் கிட்ஸ்!
பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது 61வது வயதில் 3வது திருமணம் செய்துகொண்டது பெரும் பேசுபொருளாக இணையத்தளத்தில் வலம் வருகிறது. மேலும் இந்த திருமண செய்தியை கேட்டு 90 கிட்ஸ் புலம்பி வருகின்றனர்.
பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் அமீர்கான். நல்ல கதையம்சம் கொண்ட படங்களை பலமுறை ஆராய்ந்து பின்னர் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என கூறுகின்றனர். அவ்வளவு எளிதில் ஒரு படத்திற்கு ஓகே சொல்லமாட்டார் எனவும் கூறுகின்றனர்.
கதாபாத்திரம், கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அமீர்கான், ரஜினியின் 'கூலி' படத்தில் கேமியோ ரோலில் நடித்தது அனைவருக்கும் ஆச்சரியமே. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கே எப்படி அவர் ஒப்புக்கொண்டார் என்று தெரியவில்லை என கூறியிருந்தார்.
இந்தியளவில் ஸ்டார் நடிகராக இருக்கும் அமீர்கான், தனது காதலி கௌரி ஸ்ப்ராட்டை மும்பையில் உள்ள தனது வீட்டில் நேற்று திருமணம் செய்துகொண்டார். இது இவரின் மூன்றாவது திருமணம் ஆகும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அமீர்கானின் திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் அமீர்கானின் வயது 61 என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர்கானின் முதல் மனைவி ரீனா தத்தா. 1986 முதல் 2002 வரை இவர்களின் திருமண வாழ்க்கை இருந்தது. இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் என இருவர் இருக்கின்றனர்.
பின்னர் 2005இல் கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கிரண் ராவ், லாபதா லேடீஸ் பட இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதி 2021இல் பிரிந்தனர்.
இந்த நிலையில் தனது 61வது வயதில் மகன்கள், மகள் முன்னிலையில் மூன்றாவதாக கௌரி ஸ்ப்ராட்டை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமண செய்து 90ஸ் கிட்ஸை புலம்ப செய்துள்ளது. "நல்ல சம்பளம் நல்ல வேலை இருந்தும் திருமணத்திற்கு பெண் கிடைக்கமா அலையோரும்.. ஆனால் தலைவனுக்கு எங்கையோ மச்சம் இருக்குப்பா" என புலம்பி வருகின்றனர். இப்படியான மீம்ஸ் பல சோசியல் மீடியாக்களிலும் வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications