Home / Photos
PHOTOS: ஜென்டில்மேன், முத்து பட நடிகை சுபஸ்ரீ-யை நியாபகம் இருக்கா? இப்ப எப்படி இருக்காங்கன்னு பாத்தீங்களா!
By Chandru
rajnikanth in muthu movie actress subhashri latest photos goes viral on social media. check out her latest photos here.
1/6
Share
ரஜினி, அர்ஜுன் பட நடிகை சுபஸ்ரீ-யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆமாம் யார் இந்த சுபஸ்ரீ? கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன், செந்தில், கவுண்டமணி ஆகியோர் நடிப்பில் வெளியான ஜென்டில்மேன்.
2/6
Share
இயக்குநர் ஷங்கரின் முதல் படமான இந்த ஜென்டில்மேன் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் மெகா ஹிட் படமாக ரசிகர்களை ஈர்த்தது. மேலும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று இசைபுயல் ஏஆர் ரஹுமானின் இசை தான். பாடல்கள் ஒவ்வொன்றும் சினிமா ஆடியன்ஸை அதிகம் ஈர்த்து.
3/6
Share
அதேபோல் அப்படத்தில் செந்தில், கவுண்டமணி காமெடி வேறே லெவல். பொதுவாகவே இவர்களின் கூட்டணி பட்டையைக்கிளப்பும், அதிலும் ஷங்கரின் முதல் படம் என்பதில் காமெடியை வாரி வழங்கியுள்ளனர். மேலும் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை சுபஸ்ரீ. இப்படத்தில் கிளாமரில் இளசுகளின் மனதை கட்டிபோட்டுவிட்டார். இப்படத்தின் மூலம் தமிழ் ஆடியன்ஸின் ஃபேவரைட் நடிகையாக மாறிவிட்டார் சுபஸ்ரீ.
4/6
Share
இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஜென்டில்மேன் படத்தை போலவே முத்து படத்திலும் கிளாமர் காட்டி இளசுகளின் கிளாமர் நாயகியாக வலம் வர தொடங்கினர்.
5/6
Share
தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். கிளாமர் நாயகியாக தெலுங்கில் மிக பெரிய ஃபேன் பேஸ் வைத்திருந்த சுபஸ்ரீ-க்கு ஒரு கட்டத்தில் போதிய படவாய்ப்புகள் கிடைக்காததால் திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார்.
6/6
Share
திருமணத்திற்கு பின் சினிமாவில் எட்டிப்பார்க்காத சுபஸ்ரீ தற்போது எப்படி இருக்கிறார் என்று ரசிகர்களால் இணையத்தளத்தில் வலைபோட்டு தேட தொடங்கினர். தேடுதலுக்கு பலனாக சுபஸ்ரீ-யின் லேட்டஸ்ட் புகைப்படம் கிடைத்தது. கிளாமர் குயினாக இளசுகளை வசியம் செய்த சுபஸ்ரீ, தற்போது உடல் எடை கூடி ஆளே மாறிப்போய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது சுபஸ்ரீயின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் செம்ம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications