Asian Games 2026: பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்? டாப் 5 நாடுகளின் லிஸ்ட்!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா எத்தனை பதக்கங்கள் வென்றுள்ளது? பிற நாடுகளின் நிலை என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் நடைபெற்று வந்தது. கடந்த 3ம் தேதியுடன் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்தன. அதன்படி நேற்று 4ம் தேதி நிறைவு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிலையில் அதிக பதக்கங்கள் வென்ற டாப் 5 நாடுகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
21 தங்கம், 25 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 70 பதக்கங்களுடன் உஸ்பெகிஸ்தான் நாடு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 85 பதக்கங்களுடன் இந்தியா நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
39 தங்கம், 43 வெள்ளி, 68 வெண்கலம் என மொத்தம் 150பதக்கங்களுடன் தென்கொரியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியை நடத்திய ஜப்பான், 83 தங்கம், 95 வெள்ளி, 91 வெண்கலம் என மொத்தம் 269 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இறுதியாக, ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற நாடாக சீனா உள்ளது. 169 தங்கம், 89 வெள்ளி, 83 வெண்கலம் என மொத்தம் 341 பதக்கங்களுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.



Click it and Unblock the Notifications