மலையாளத்தில் கொண்டாடப்பட்ட பசில் ஜோசஃபின் 'அதிரடி' திரைப்படம்.. ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா?
பசில் ஜோசப், டோவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மலையாள படமான 'அதிரடி' திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. வாங்க எந்த ஓடிடி? எப்போ? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிரடி: அருண் அனிருதன் இயக்கத்தில் பசில் ஜோசப், டோவினோ தாமஸ், தர்ஷனா ராஜேந்திரன், ரியா ஷிபு, விஷ்ணு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'அதிரடி'. இப்படம் கடந்த மே 22ம் தேதி தியேட்டரில் ரிலீசாகி நல்ல வரவேற்பு பெற்றது.
கதை? பொறியியல் கல்லூரி மாணவனாக பசில் ஜோசப் நடித்துள்ளார். அவர் படிக்கும் கல்லூரியில் அவரின் அண்ணன் சீனியர். பசில் ஜோசபின் அண்ணன் அந்த கல்லூரியில் படிக்கும்போது கலைநிகழ்ச்சியில் நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் கல்லூரியில் படித்த மாணவி ஒருவரும், அவரின் காதலியும் உயிரிழந்துவிடுகின்றனர். அதன்பின்னர் அந்த கல்லூரியில் நிகழ்ச்சிகளே நடத்தப்படவில்லை.
அண்ணன் படித்தே அதே கல்லூரியில் சேரும் பசில் ஜோசப், தனது அண்ணனுக்காக அந்த கல்லூரியில் கலைநிகழ்ச்சி நடத்த ஆசைப்படுகிறார். அதேபோல் தனது காதலிக்கவும் அதை செய்ய ஆசைப்படுகிறார். இதனை செய்தால் கல்லூரியில் தான் செம பாப்புலராகிவிடுவோம், கெத்தாக இருக்கலாம் என்பதற்காக நிகழ்ச்சியை நடத்த முயற்சிக்கிறார்.
கல்லூரி நிர்வாகத்தை ஒரு வழியாக சம்மதிக்கவைத்து கலைநிகழ்ச்சியை நடத்த முடிவுசெய்துவிடுகிறார். மற்றொருபக்கம் ரவுடியாக இருந்த டோவினோ தாமஸ் திருந்து அந்த நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி தன்னை நிரூபிக்க முயற்சிக்கிறார். அதேவேளையில் பசில் ஜோசப் மற்றொரு பிரபல பாடகரை அந்நிகழ்ச்சியில் பாடவைக்க முயற்சிக்கிறார்.
இதனால் பசில் ஜோசப் குழுவுக்கும், டோவினோ தாமஸ் குழுவிற்கும் மோதல் ஏற்படுகிறது. இறுதியாக கலைநிகழ்ச்சி நடந்ததா? நிகழ்ச்சியில் யார் பாட்டு பாடினர்? என்பதே படத்தின் மீதி சுவாரசிய கதைக்களம். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம், 75 கோலடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து ஹிட் கொடுத்தது.
ஓடிடி? கடந்த மே 22ம் தேதி தியேட்டரில் ரிலீசாகி வசூலிலும், விமர்சனத்திலும் செம ஹிட்டான இப்படம், தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் ஜூன் 19ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இப்படத்தை தமிழ் மொழியிலும் காணலாம்.


Click it and Unblock the Notifications