பாசிட்டிவ் விமர்சனங்களுடன் மக்களை ஈர்த்து வரும் பத்தா.. இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'பத்தா' திரைப்படம் 2 நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் பாலாஜி தரணிதரன்: 'நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் பாலாஜி தரணிதரன். அப்படத்தில் விஜய் சேதுபதியை இயக்கி ஹாட் கொடுத்தார். அதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து 'சீதக்காதி' படத்தை கொடுத்தார். ஆனால் அப்படம் தோல்வியடைந்தது.
விஜய் சேதுபதியுடன் கூட்டணி: 'சீதக்காதி' பட தோல்வியை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கூட்டணி அமைத்து 'பத்தா' படத்தை இயக்கியுள்ளார். அப்படம் கடந்த ஆக்டொபர் 1ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.
பத்தா படக்குழு: விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் அட்லீ தயாரித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கதை சுருக்கம்: 1986ம் ஆண்டு நடக்கும் கதைக்களம். வடசென்னையில் பெரிய டானாக விஜய் சேதுபதி உள்ளார். பயங்கரமான உள்ளூர் ரௌடி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விஜய் சேதுபதியை பார்த்தால் பயம்.
மனைவியை மதிக்காத ரௌடி, மகள் என்றால் எவ்வளவு பிரியம். மகள் மீது உயிரே வைத்துள்ளார். ஊருக்கே டானாக இருக்கும் பத்தாவுக்கு ஒரு கட்டத்தில் இவருக்கு இந்த நிலைமையா? என்று சொல்லும் அளவுக்கு திரைக்கதை சுவாரசியம் நிறைந்ததாக நகர்கிறது. எமோஷன், ஆக்ஷன், காமெடி என பார்வையாளர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.
2 நாள் வசூல்: பாசிட்டிவ் விமர்சனங்களுடன் வசூல் வேட்டை நடத்தி வரும் விஜய் சேதுபதியின் 'பத்தா' கடந்த இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் வாரங்களில் பத்தா திரைப்படம் பக்கா மாஸ் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications