Baththa OTT: 'ஊரோட ஒத்த டான்'.. ஓடிடி ரிலீஸுக்கு தயாரான 'பத்தா'.. எப்போது? எதில் பார்க்கலாம்?
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமான 'பத்தா' ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வாங்க எப்போது? எதில்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' பட இயக்குநர் பாலாஜி தரணீதரன்-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவான திரைப்படம் 'பத்தா'. அட்லீ அப்படத்தை தயாரித்துள்ளார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை லிஜோ மோல் நடித்துள்ளார். மேலும் இன்ஸ்டா பிரபலம் பாலமுருகன், குழந்தை நட்சத்திரம் சாய் பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்த அணைத்து பாடல்களும் ஹிட். குறிப்பாக 'ஊரோட ஒத்த டான்' பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.
அக்டோபர் 1ம் தேதி தியேட்டரில் ரிலீசான இப்படம், விமர்சனத்திலும், வசூலிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பத்வாசலம் என்ற மெட்ராஸ் ரௌடியை பற்றிய கதை.
வசூல்? தியேட்டரில் வெற்றிநடைபோட்ட இப்படம், 33 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. தற்போது இப்படம், ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
ஓடிடி? தற்போது விஜய் சேதுபதியின் 'பத்தா' நாளை அக்டோபர் 29ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தியேட்டரில் மிஸ் செய்தவர்கள் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications