Home / Photos
வாழைப்பழத் தோலின் மகிமை தெரியுமா? மறந்தும் தூக்கிப் போட்றாதீங்க.. அதன் பலனை தெரிஞ்சுக்கோங்க!
By Chandru
நம் உடலுக்கு எக்கச்சக்கமான நன்மைகள் தரும் பழமாக இருப்பது வாழைப்பழம். பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ உள்ளிட்ட பல சத்துக்கள் வாழைப்பழத்தில் அடங்கியுள்ளது. இப்படியாக வாழைப்பழத்தின் பலனை அடுக்கிக்கொண்டே போகலாம் ஆனால் அதன் தோலில் உள்ள நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: BOLDSKY
Share
வாழைப்பழத் தோலில் அதிகளவு ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் ஃபேட்டி ஆசிட் உள்ளதால் இது நம் அழகுக்கு பெரிதும் உதவுகிறது. எந்தெந்த வழியில் வாழைப்பழத் தோலை பயன்படுத்தினால் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
2/5
Photo Credit: BOLDSKY
Share
உடலில் உள்ள மருக்களை நீக்க வாழைப்பழத் தோல் பெரிதும் பயன்படுகிறது. மருக்கள் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை துணியில் வைத்து கட்டி இரவு முழுவதும் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் மருக்கள் நீங்கும்.
3/5
Photo Credit: BOLDSKY
Share
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் பிரச்சனைகளுக்கு தீர்வும் தரும் பொருளாக வாழைப்பழத் தோல் உள்ளது. பிரச்சனை இருக்கும் இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு தேய்த்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
4/5
Photo Credit: BOLDSKY
Share
முகத்தில் ஏற்படும் முகப்பரு, கருவளையம் ஆகியவற்றை வாழைப்பழத் தோலை கொண்டு 10 நிமிடம் தேய்த்து வந்தால் போதும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
5/5
Photo Credit: BOLDSKY
Share
சருமத்துக்கு மட்டுமல்லாமல் பற்களுக்கும் வாழைப்பழத் தோல் உதவுகிறது. பல் துலக்கிய பின் வாழைப்பழத் தோலை பயன்படுத்தி பற்களை தேய்த்து வந்தால் பல் பளபளவென மாறிவிடும். ஆகவே அடுத்தமுறை நீங்கள் வாழைப்பழம் சாப்பிடும்போது அதன் தோலை மறந்தும் தூக்கி எறிந்துவிடாதீர்கள்.


Click it and Unblock the Notifications