Home / Photos
இளமை ததும்ப ஆரஞ்சு பழ ஜூஸ்.. தினமும் ஆரஞ்சு பழ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!
நல்ல திடகாத்திரமான இளமைக்கு உண்ணும் உணவு முக்கிய பங்காற்றுகிறது. அந்தவகையில் இளமையை தக்கவைத்துக்கொள்ள உதவும் ஆரஞ்சு பழ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை இப்போது பார்ப்போம்.
1/8
Share
கோடை காலம் நெருங்கி வரும் இந்த சீசனில் நாம் அனைவரும் பழங்களை சாப்பிட ஆரம்பித்திருப்போம். குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள் இந்த சமயங்களில் பெரிதும் உதவக்கூடியவை.
2/8
Share
அந்தவகையில், ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி, ஈ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.
3/8
Share
சில உணவுகள் பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் கண் பார்வை நரம்புகள் பாதிப்படைகிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதிக்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.
4/8
Share
இந்த பித்த நீர் அதிகமாக சுரப்பதை தடுக்கவும், உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களை பெறவும் ஆரஞ்சு பழச்சாறு அருந்தலாம். அவ்வாறு ஆரஞ்சு ஜூஸ் குடிப்பவர்கள் இரத்தத்தில் பித்த நீர் குறைவாக இருக்கும்.
5/8
Share
ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. உடலும் முதுமையின்றி இளமையாக இருக்கும். அதேபோல் ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் சி இதயத்தை பாதுகாக்கிறது.
6/8
Share
அதோடு, அக்கி, தோல் வியாதிகள், மஞ்சள் காமாலை, டைபாயிடு போன்றவைகளில் இருந்து உடனடி நிவாரணம் தருகிறது. மேலும் ஆரஞ்சு கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆரஞ்சை பழமாகவோ அல்லது ஜுஸாகவோ சாப்பிடலாம்.
7/8
Share
இரவில் தூங்கச்செல்வதற்கு முன் அரை டம்ளர் ஆரஞ்சு சாறு குடித்தால் உடல் சூடு, மூல வியாதி போன்றவற்றிற்கும், சிறு நீர் எரிச்சல், சிறுநீர்க் கோளாறுகளுக்கும் அற்புத பலன் கிடைக்கும். ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
8/8
Share
இது மலச்சிக்கலை நீக்குகிறது மற்றும் செரிமானத்தை எளிதாக்குகிறது. ஆரஞ்சு பழ ஜூஸில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும். கர்ப்பிணி பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் குமட்டல் நின்று விடும். என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சு பழச்சாறு மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications