Home / Photos
2024ம் ஆண்டு ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படங்களின் லிஸ்ட்.. மிஸ் செய்திருந்தால் இந்த ஓடிடி-யில் பார்க்கலாம்!
By Chandru
2024ம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட இந்திய திரைப்படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. எந்தெந்த படம்? எந்தெந்த ஓடிடி-யில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/15
Share
இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற படம் லாபட்டா லேடிஸ் திரைப்படம். வித்தியாசமாகவும், சிந்திக்கவைக்கும் கதைகளுடன் மக்களை ஆச்சரியப்படுத்தினார் இயக்குநர். இப்படம் தியேட்டரில் வெளியாகும்போது சொல்லும் அளவிற்கு ரீச் ஆகவில்லை, அதேவே இப்படம் ஓடிடி ரிலீஸ் ஆகும்போது அமோக வரவேற்பை பெற்றது. இந்த ஆண்டிற்கான சிறந்த படங்களின் லிஸ்டில் முதல் இடத்தில் உள்ளது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
2/15
Share
நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் பிரமயுகம். 17ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட காட்சிகளை போல் இப்படத்தின் திரைக்கதை எடுக்கப்பட்டுள்ளது. அரசியல், மாந்திரிகம், ஒடுக்குமுறை இவை அனைத்தையும் இப்படம் காட்டுகிறது. இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
3/15
Share
மலையாளத்தில் வெளியான மற்றொரு சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் மஞ்சுமேல் பாய்ஸ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
4/15
Share
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான திரைப்படம் மைடன். கால்பந்து விளையாட்டை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதைக்களம் நகரும். இப்படத்தை பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
5/15
Share
டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் அன்பேஷிப்பின் கண்டேதும். கிரைம், திரில்லர் திரைப்படமாக வெளியாகி அசத்தல் வெற்றிபெற்றது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
6/15
Share
மலையாளத்தில் வெளியான மற்றொரு சூப்பர் ஹிட் திரைப்படம் அஞ்சக்கல்லகொக்கன்(Anchakkallakokkan). இப்படத்தை பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
7/15
Share
நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான அதிரடி சூப்பர் ஹிட் திரைப்படம் ஆவேசம். சிம்புளான கதைக்களம் என்றாலும் பகத்தின் நடிப்பு படத்தை மெகா ஹிட்டாகியது. இளைஞர்களை அதிகம் ஈர்த்த இப்படத்தை பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
8/15
Share
இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
9/15
Share
பஞ்சாபி பாடகரின் வாழ்க்கை கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சம்கிலா. நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications