2025ம் ஆண்டின் சிறந்த வெப் சீரிஸ்.. நெட்பிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், சோனி லைவ்.. எதில் பார்க்கலாம்?
2025ம் ஆண்டில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வெப் தொடர்கள் என்னென்ன? எந்த ஓடிடி தளங்களில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த திகிலான ஹாரர் வெப் தொடர் 'Bhay: The Gaurav Tiwari Mystery'. அமேசான் பிரைம், எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் 2025ம் ஆண்டின் சிறந்த வெப் தொடர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
2019ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் கிரைம், திரில்லர் வெப் தொடர் 'Delhi Crime'. முதல் இரண்டு சீசன் ஹிட்டானதை தொடர்ந்து மூன்றாவது சீசன் 2025ல் ரிலீஸாகி வேற லெவல் வரவேற்பு பெற்றது. நிர்பயா வழக்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸான இத்தொடர் 2025ம் ஆண்டின் சிறந்த தொடராக பார்க்கப்படுகிறது.
ஹிந்தியில் வெளிவந்த கலக்கலான காமெடி வெப் தொடர் 'Dupahiya'. தொடர்ந்து 25 வருடங்களாக குற்ற சம்பவங்கள் இல்லாத ஒரு கிராமத்திற்கு புல்லட் பைக் பரிசாக கொடுக்கப்படுகிறது. அந்த பைக் காணாமல் போன நிலையில் பின்னர் என்ன ஆனது என்பதே இத்தொடரின் காமெடி கதைக்களம். 2025ம் ஆண்டின் சிறந்த வெப் தொடர்களில் ஒன்றாகும்.
ஆக்ஷன், கிரைம், மிஸ்ட்ரி, திரில்லர் ஜானரில் வெளிவந்த ஹிந்தி வெப் தொடர் 'Paatal Lok'. இத்தொடரின் இரண்டாவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி செம ஹிட்டானது. 2025ம் ஆண்டின் சிறந்த வெப் தொடர்களில் ஒன்று.
ஹிந்தியில் வெளிவந்த காமெடி, திரில்லர், கிரைம், ஸ்பை வெப் தொடர் 'The Family Man'. இத்தொடரின் முதல் இரண்டு சீசன் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து மூன்றாவது சீசன் வெளியாகி ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து. 2025ம் ஆண்டின் சிறந்த தொடராக பார்க்கப்படுகிறது.
ஹிந்தியில் வெளிவந்த திரில்லர் வெப் தொடர் 'The Hunt: The Rajiv Gandhi Assassination Case'. ராஜீவ் காந்தி கொலையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தொடராகும். விறுவிறுப்பு சுவாரசியம் நிறைந்த இத்தொடர் சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகி சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது.
ஹிந்தியில் வெளிவந்த கிரைம், திரில்லர் வெப் தொடர் 'Black Warrant'. திகார் சிறைச்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஜெயிலர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன? என்ன செய்தார் என்பதே இத்தொடரின் கதைக்களம். நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸான இத்தொடரை கண்டிப்பா பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications