Home / Photos
PHOTOS : இந்த ஆண்டு வாட்ஸ் அப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அப்டேட்கள் என்னென்ன?.. ஒரு பார்வை!
By Chandru
உலகளவில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். இன்ஸ்டாகிராம், பேஸ் புக், ட்விட்டர் போன்ற செயலிகள் மக்களின் செல்போன்களில் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ் அப் இல்லாத செல்போன்களை பார்க்கமுடியாது.
1/12
Share
உலகளவில் மிகவும் பிரபலமான செயலிகளில் ஒன்று வாட்ஸ் அப். இன்ஸ்டாகிராம், பேஸ் புக், ட்விட்டர் போன்ற செயலிகள் மக்களின் செல்போன்களில் இருக்கிறதோ இல்லையோ வாட்ஸ் அப் இல்லாத செல்போன்களை பார்க்க முடியாது.
2/12
Share
முன்னொரு காலத்தில் உறவினர்கள், நண்பர்களுக்கு இன்பமான செய்தியோ, துக்கமான செய்தியோ தபால் மூலம் தெரிவித்து வந்தோம்.தொழில்நுட்பம் வளர்ந்ததும் கல்யாண பத்திரிகையை கூட வாட்ஸ் அப்பில் அனுப்பும் நிலையில் தற்போது இருக்கின்றோம்.
3/12
Share
2009 ஆம் ஆண்டு ஜான் கோம் என்பவரால் உருவாக்கப்பட்ட வாட்ஸ் அப் பின் 2017 ஆம் ஆண்டு மார்க் ஜுக்கர்பெர்க் இதனை வாங்கி பல சிறப்பம்சங்களை அப்டேட் செய்தார்.மெசேஜ் செய்வது போன்ற அடிப்படை அம்சங்களை கொண்ட வாட்ஸ் அப்பில் வீடியோ கால் போன்ற பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தினார் மார்க் ஜுக்கர்பெர்க்.
4/12
Share
தற்போது உலகம் முழுவதும் மில்லியன் கணக்கானோர் இந்த வாட்ஸ் அப் செயலியை தங்களது அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்தநிலையில் இந்த ஆண்டு வாட்ஸ் அப்பில் புதிதாக அறிவிக்கப்பட்ட அப்டேட்கள் என்ன என்பதை பார்ப்போம் :
5/12
Share
முதல் அப்டேட் : வாட்ஸ் அப்பில் வீடியோ கால் என்ற அம்சம் ஏற்கனவே இருந்த நிலையில் இந்த ஆண்டு அதில் அப்டேட் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் சுமார் 32 நபர்கள் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்ளும் அப்டேட்டை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.
6/12
Share
இரண்டம் அப்டேட் : நாம் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் பொது ஆன்லைனில் உள்ளீர்கள் என மற்றவர்களுக்கு காண்பிக்கும்.நாம் ஆன்லைனில் உள்ளதை பிறருக்கு காண்பிக்கக்கூடாது அல்லது நமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் காண்பிக்கும் புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.
7/12
Share
மூன்றாம் அப்டேட் : வாட்ஸ் அப்பில் பல நண்பர்கள் ஒன்றாக ஒரு இடத்தில் மெசேஜ் செய்வதற்கு குரூப் சேட் என்ற அம்சம் உள்ளது.இந்த குரூப் சேட்டில் இருந்து நாம் விலகினால் அது குரூப்பில் உள்ள மற்றவர்களுக்கு நீங்கள் விலகிவிட்டீர்கள் என காண்பிக்கும்.ஆனால் இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் விலகுவது யாருக்கும் தெரியாதபடி அமைதியாக வெளியேறும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.
8/12
Share
நான்காம் அப்டேட் : வாட்ஸ் அப் மூலம் பிறருக்கு மெசேஜ் மட்டும் தான் அனுப்பும் வசதிகள் இருந்தது, ஆனால் இம்முறை நமக்கு நாமே மெசேஜ் செய்துகொள்ளும் அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் நமக்கு தேவையான தகவல்களை இதில் ஸ்டோர் செய்துகொள்ளலாம்.
9/12
Share
ஐந்தாம் அப்டேட் : வாட்ஸ் அப்பில் நாம் நமது புகைப்படத்தை ப்ரொஃபைல் பிக்சர் வைத்துக்கொள்ளும் வசதி ஏற்கனவே இருந்தது, ஆனால் இந்த அப்டேட் மூலம் நாம் நமது ப்ரொஃபைல் பிக்சரை நமக்கு தெரியாதவர்களுக்கு இல்லையெனில் நமக்கு பிடிக்காதவர்களுக்கு காண்பிக்க கூடாது என்ற அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.


Click it and Unblock the Notifications