Home / Photos
PHOTOS: இதுவரை ரெட் கார்ட் மூலம் வெளியேற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்.. லிஸ்ட் இதோ!
By Chandru
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்புக்கு, பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ரொமான்ஸ், காதல், சண்டை என விறுவிறுப்பாக மக்களை மகிழ்வித்து வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளரான பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
1/7
Share
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி விறுவிறுப்புக்கு, பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. ரொமான்ஸ், காதல், சண்டை என விறுவிறுப்பாக மக்களை மகிழ்வித்து வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளரான பிரதீப் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
2/7
Share
சக போட்டியாளர்களை தரைகுறைவாக பேசுகிறார், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துகிறார், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது பிரதீப் வெளியேற்றப்பட்டது சரி என்று ஒரு தரப்பும், இல்லை ரெட் கார்ட் கொடுத்தது தப்பு என பிரதீபுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பும் பேசி வருகின்றனர். அந்தவகையில் பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து தற்போது வரை யாரெல்லாம் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியாட்டரப்பட்டனர் என்று பார்ப்போம்.
3/7
Share
பரணி: பிக் பாஸ் முதல் சீசனில் நடிகர் பரணி வீட்டை விட்டு எஸ்கேப் ஆக முயற்சி செய்ததால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் ஹிஸ்டரியில் முதல் முறையாக ரெட் கார்ட் வாங்கிய பெருமை பரணிக்கே சேரும்.
4/7
Share
மஹத்: நடிகர் சிம்புக்குவின் நெருங்கிய நண்பனான மஹத்துக்கு பிக் பாஸ் சீசன் இரண்டில் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான டேனியலை தாக்கியதற்காக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
5/7
Share
மதுமிதா: காமெடி நடிகையாக தமிழ் மக்களின் மனதை கொள்ளையடித்தனர் நடிகை மதுமிதா. பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துகொண்ட மதுமிதா, மனஅழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக் பாஸ் விடை விட்டு வெளியேற்றப்பட்டார்.
6/7
Share
சரவணன்: பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற நடிகர் சரவணனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. பெண்களை ஆபாசமாக பேசியதற்காக ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
7/7
Share
இறுதியாக தற்போது விஜய் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7ல் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆபாச வர்த்திகளை பயன்படுத்துதல், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சக போட்டியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டதால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications