Home / Photos
பாரத ரத்னா விருது வென்ற தமிழர்கள்.. யார் யாருக்கு, எப்போது கொடுக்கப்பட்டது? ஒரு பார்வை!
By Chandru
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல் கே அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் இதுவரை 49 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது, இதில் 8 தமிழர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த 8 தமிழர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
1/9
Share
இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது முன்னாள் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல் கே அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியவில் இதுவரை 49 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது, இதில் 8 தமிழர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த 8 தமிழர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
2/9
Share
சி. ராஜகோபாலாச்சாரி (1878-1972): இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல், சுதந்திர போராட்ட வீரர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ராஜாஜிக்கு 1954ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் முதல் பாரத ரத்னா விருது வாங்கிய பெருமை ராஜாஜிக்கே.
3/9
Share
சி.வி.ராமன் (1888-1970): இயற்பியல் துறையில் படைத்த சாதனைக்காக நோபிள் பரிசு வென்றவர். இவருக்கு 1954ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.
4/9
Share
ராதாகிருஷ்ணன் (1888-1975): மாணவர்கள் சிறந்த கல்வியை பெற சிறப்பான கொள்கைகளை வகுத்து கொடுத்தவர் ராதாகிருஷ்ணன். இவரை போற்றும் விதமாக இவரின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக பதவி வகித்தவர். 1954ம் ஆண்டு ராதாகிருஷ்ணனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
5/9
Share
காமராஜர் (1903-1975): தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், ஏராளமான பள்ளிக்கூடங்களை திறந்து வைத்து தமிழ்நாட்டை அறிவுமிகுந்த மாநிலமாக மாற்றியவர். இதனால் கல்வி கண்திறந்து காமராஜர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். 1976ம் ஆண்டு காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
6/9
Share
எம்.ஜி.ஆர் (1917-1987): தமிழ்நாட்டின் முதலமைச்சராக தொடர்ந்து 10 ஆண்டுகள் நீடித்தவர் எம்ஜி ராமச்சந்திரன் என்ற எம்.ஜி.ஆர். 1988ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
7/9
Share
ஏபிஜே அப்துல் கலாம் (1931-2015): அணுசக்தி ஆயுதங்களில் இந்தியாவை உயர்த்தி காட்டியவர் ஏபிஜே அப்துல் கலாம். முன்னாள் குடியரசு தலைவரான ஏபிஜே அப்துல் கலாமுக்கு 1997ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
8/9
Share
எம்எஸ் சுப்புலட்சுமி (1916-2005): கர்நாடக இசையில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் எம்எஸ் சுப்புலட்சுமி. 1998ம் ஆண்டு சுப்புலட்சுமிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
9/9
Share
சிதம்பரம் சுப்பிரமணியன் (1910-2000): இந்தியாவில் பசுமை புரட்சியை உருவாக்கியவரும், சுதந்திர போராட்ட வீரருமான சிதம்பரம் சுப்பிரமணியனுக்கு 1998ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications