Home / Photos
PHOTOS: சத்தமே இல்லாமல் நடந்த 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகர் அகிலன் திருமணம்.. பதறும் பெண் ரசிகைகள்
By Chandru
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பியாகவும் இரண்டாவது கதாநாயகனாக முதலில் நடித்தவர் அகிலன். அந்த கதாபாத்திரத்தின் பெயரும் அதே தான். அகிலன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
1/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பியாகவும் இரண்டாவது கதாநாயகனாக முதலில் நடித்தவர் அகிலன். அந்த கதாபாத்திரத்தின் பெயரும் அதே தான். அகிலன் தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/7
Photo Credit: Instagram
Share
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல ஒரு இடத்தை பிடித்து விட்டது. இந்த சீரியலில் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தனர்.
3/7
Photo Credit: Instagram
Share
முதல் பக்கத்தில் நடித்த நடிகர்களுக்கு இன்றும் ரசிகர்கள் கூட்டம் இருந்து கொண்டுதான் உள்ளது. ரோஷினி ஹரிபிரயன், அருண் (பாரதி டாக்டர்) கண்மணி , அகிலன் என இவர்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பாரதி, கண்ணம்மா போலவே அகிலன் அஞ்சலி ஜோடிக்கு தனி ரசிகர்கள் இருந்தார்கள்.
4/7
Photo Credit: Instagram
Share
இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர்களை ரசிகர்கள் அதிகமாக மிஸ் பண்ணுவார்கள். காரணம் இந்த சீரியல் பல வருடங்களாக ரசிகர்களோடு கலந்துவிட்டது. அதிகமாக ரசிகர்கள் இந்த சீரியலை கலாய்த்து வந்தாலும் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றது.
5/7
Photo Credit: Instagram
Share
பாரதி கண்ணம்மா தொடரில், அகிலன் கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது அகிலன் தான். அதன் பின்னர் சுகேஷ் இந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்தார். அகிலன் அதற்கு பிறகு முழுக்க முழுக்க பெரிய திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
6/7
Photo Credit: Instagram
Share
விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தில் அவர் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின் அவர் Modern Love Chennai என்ற வெப் தொடரில் ரித்து வர்மாவுடன் நடித்துள்ளார். அகிலன், கண்மணி இருவரும் இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்கள்
7/7
Photo Credit: Instagram
Share
இந்நிலையில் தற்போது அகிலன் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அக்ஷயா முரளிதரன் என்ற அவரது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை வெளியிட்டு ' இனி என்றென்றும் உன்னுடன்' என கேப்சன் இட்டுள்ளார். இதை பார்த்த பெண் ரசிகைகள், சொல்லவே இல்ல என கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications