Home / Photos
PHOTOS: பிக் பாஸ் வீட்டுக்குள் ஐஷு - நிக்சன் ரொமான்ஸ்! எக்ஸ் தளத்தில் ட்ரெண்டிங்.. என்னாச்சு தெரியுமா?
By Chandru
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஐஷு என்ற ஐஸ்வர்யா எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். ஐஷு ட்ரெண்டானதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்..
1/7
Share
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஐஷு என்ற ஐஸ்வர்யா எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் டாப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். ஐஷு ட்ரெண்டானதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்..
2/7
Share
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் நிகழ்ச்சி. எத்தனையோ சீரியல்கள் இருந்தாலும் மக்களின் விருப்பமான லிஸ்டில் பிக் பாஸ் கண்டிப்பாக இருக்கும். போட்டியாளர்கள் சண்டை போடுவதும், சக போட்டியாளர்களை பற்றி புறணி பேசுவதும் என பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களை செமையாக என்டேர்டைன் செய்து வருகிறது.
3/7
Share
கடந்த 6 பிக் பாஸ் சீசன் மக்களை என்டேர்டைன் செய்து வந்த நிலையில் இம்முறை பல திருப்பங்களுடன் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மக்கள் ஈர்த்து வருகிறது. வழக்கமாக ஒரே ஒரு வீடு தான் இருக்கும் ஆனால் இம்முறை இரண்டு வீடுகளுடன் பிக் பாஸ் சீசன் 7 மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
4/7
Share
சுமார் 20க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஷு என்ற ஐஸ்வர்யா தற்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். காரணம் சக போட்டியாளரன பாடகர் நிக்சன் மீது காதலில் விழுந்துள்ளார் ஐஷு.
5/7
Share
ஊட்டியை பூர்விகமாக கொண்ட ஐஷு, கடந்த பிக் பாஸ் சீசனில் பங்கேற்ற அமீரின் டான்ஸ் பள்ளியைச் சேர்த்தவராம். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு செமி பைனல் வரை சென்றவர் ஐஷு. பார்ப்பதற்கு நடிகை யாஷிகாவை போல் இருப்பதால் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்து விருப்பமான போட்டியாளராக வலம் வருகிறார்.
6/7
Share
இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் வீட்டில் ஒரு பக்கம் ஐஷு இருக்க, மறுப்பக்கம் கண்ணாடிக்குள் இருக்கும் நிக்சனைப் ஐஷு கிஸ் அடிக்க முயற்சிக்கிறார் ஆனால் கண்ணாடி தடுக்கிறது. கடந்த 6 பிக் பாஸ் சீசனை விட இது வேற லெவல் ரொமான்டிக் ஆக இருந்தது என்று பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த காட்சி சிலரை முகம் சுளிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
7/7
Share
தற்போது ஐஷு - நிக்சன் முத்தமிடும் வீடியோ தான் எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது. மேலும் ஐஷு எக்ஸ் (ட்விட்டர்) தளத்தின் டாப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறார், ஐஷு முதல் இடத்தில் இருப்பதற்கு காரணம் அந்த முத்தமிடும் வீடியோ தான்.


Click it and Unblock the Notifications