Home / Photos
PHOTOS: 16 லட்சத்துடன் வந்த பூர்ணிமா.. ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்ற குடும்பத்தினர்.. அடேங்கப்பா வேற லெவல் சர்ப்ரைஸ்!
By Chandru
family invited bigg boss 7 poornima ravi with big celebration. check out the latest photos here.
1/6
Photo Credit: instagram
Share
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான பூர்ணிமா 16 லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை குடும்பத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
2/6
Photo Credit: instagram
Share
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரின் ஃபேவரைட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். கடந்த 6 பிக் பாஸ் சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். சண்டை, டான்ஸ், காமெடி என அனைத்தும் நிறைந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் இம்முறை வித்தியாசமான ஐடியாக்களுடன் ஒளிபரப்பானது.
3/6
Photo Credit: instagram
Share
கடந்த அக்டோபர் 1ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7ல் புது ஐடியாக்கள் கொண்டுவரப்பட்டது. பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என பல சுவாரசியமான ஐடியாக்களுடன் பிக் பாஸ் சீசன் 7 ஒளிபரப்பானது. வழக்கம் போல் மக்களும் அமோக வரவேற்பை கொடுத்தனர்.
4/6
Photo Credit: instagram
Share
சுமார் 100 நாட்கள் நடைபெறும் இந்த பிக் பாஸ் தற்போத 90 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் தற்போது 8 போட்டியாளர்கள் விளையாடி வந்தனர். ரெட் கார்டு, எவிக்சன் என பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 7ல் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்பட்டது.
5/6
Photo Credit: instagram
Share
1 லட்சம் ரூபாயில் தொடங்கிய இந்த பணப்பெட்டி டாஸ்கில் யார் பணப்பெட்டியை எடுக்கப்போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகமானது. இதில் விசித்ரா தான் பணப்பெட்டியை எடுக்கப்போகிறார் என்று ஆடியன்ஸும் முடிவு செய்துவிட்டனர். இந்த நிலையில் தான் செம்ம ட்விஸ்ட் ஏற்பட்டது. விசித்ரா எடுப்பார் என நினைக்கும் நேரத்தில் பூர்ணிமா ரவி எடுத்து செம்ம அதிர்ச்சி கொடுத்தார். 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் பூர்ணிமா.
6/6
Photo Credit: instagram
Share
பணப்பெட்டியை எடுத்ததை தொடர்ந்து சக போட்டியாளர்களின் காலில் விழுந்து மன்னிப்பும் கேட்டார். 16 லட்சம் ரூபாய்யுடன் வீட்டுக்கு வந்த பூர்ணிமாவுக்கு குடும்பத்தினர் ஆட்டம் பாட்டத்துடன் அமோக வரவேற்பு கொடுத்தனர். பூர்ணிமாவுக்கு பெரிய மாலை அணிவித்து, கேக் வெட்டி, பெரிய பேனர் வைத்து என பூர்ணிமாவுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் பூர்ணிமாவை வரவேற்ற குடும்பத்தினரின் வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications