மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிக் பாஸ் சனம் ஷெட்டி.. என்னாச்சு?
பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். வாங்க என்னாச்சுன்னு பார்ப்போம்.
மாடல் அழகி: மாடலிங் துறையில் கலங்கிக்கொண்டிருத்தவர் பிக் பாஸ் சனம் செட்டி. மிஸ் சவுத் இந்தியா பட்டம் பெற்றவர். மாடலிங்கில் கலக்கிய இவர், 'அம்புலி' படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து 'சினிமா கம்பெனி' என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் அறிமுகமானார்.
அறிமுகம்: தமிழ், மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். இப்படியாக தென்னிந்திய படங்களில் வலம் வரும் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.
பிக் பாஸ் பிரபலம்: படங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த வரவேற்பை விட பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை மிகவும் பிரபலப்படுத்தியது. காரணம், இவரின் நேர்மையான விளையாட்டு தான். எந்த டாஸ்க்காக இருந்தாலும் துணிச்சலுடன் நேர்மையாக விளையாடு மக்கள் மனதில் தனி இடம் பிடித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளரான தர்சனுடன் காதல் சர்ச்சைகள் அதிகம் பேசப்பட்டது. 64 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தார்.
போல்டான பெண்: கிளாமரான மாடல் அழகியான இவர், சமூக பிரச்சனைகளை பேசக்கூடியவர், பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றை சோசியல் மீடியாக்களில் எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார். இப்படி போல்டான பெண்ணாக இருக்கும் சனம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் சொல்லும் அளவுக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் தனது கிளாமர் மூலம் ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
கவர்ச்சி நடிகை: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்துவது இவரின் வழக்கம். 40 வயதாகும் இவர், இன்றும் செம ஃபிட்டாக கச்சிதமான உடலமைப்பை வைத்திருப்பதற்கு இவரின் உடற்பயிற்சியே காரணம். ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், மருத்துவனமயில் அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
என்னாச்சு? மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பகிர்ந்து சின்ன சர்ஜரி நடக்கவுள்ளதாகவும் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவை கண்ட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள், சனம் நீங்க குணமடைந்து நலமுடன் விரைவில் வீடு திரும்பவேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications