பிக் பாஸ் சௌந்தர்யாவா இது? தோழியுடன் பெங்களூருவில் வைப் பண்ணும் பிக்ஸ்!
பிக் பாஸ் சௌந்தர்யாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் சீசன் 8ல் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சௌந்தர்யா.
துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்த 'ஆதித்யா வர்மா' படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்து இளைஞர்களின் கவனம் ஈர்த்தார். இப்படத்திற்கு முன் தமிழ் படம் 2 மற்றும் உறியடி 2 ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து 90ML, சூப்பர் டூப்பர், தர்பார், திரௌபதி, ஹே சினாமிகா, நித்தம் ஒரு வானம், காலங்களில் அவள் வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் வில்லா டு வில்லேஜ், வேற மாறி ஆபிஸ், ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி சீசன் 6 மற்றும் சீசன் 7 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார்.
பட வாய்ப்புக்காக முயற்சித்து வரும் சௌந்தர்யா, சோசியல் மீடியாக்களில் அடிக்கடி கலக்கல் போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்கள் கூட்டத்தை தக்கவைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர், கிளாமர் உடையில் தோழியுடன் பெங்களூருவில் வைப் செய்யும் போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.



Click it and Unblock the Notifications