Blast OTT: ரூ.68 கோடி வசூல் செய்த அர்ஜுனின் 'பிளாஸ்ட்'.. ஓடிடி ரிலீஸ் எப்போது? எதில்? தகவல்!
அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த 'பிளாஸ்ட்' திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர்ஸ்: அறிமுக இயக்குனர்களை நம்பியே இன்றைய தமிழ் சினிமா உள்ளது போல் தெரிகிறது. 2026 தொடங்கி 6 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை வெளியான படங்களில் அறிமுக இயக்குனர்களின் படங்களே நல்ல வரவேற்பு பெற்றது. யூத், தாய் கிழவி, வித் லவ் ஆகிய மூன்று அறிமுக இயக்குனர்களின் படங்கள் வசூல் சாதனை படைத்தது. அந்த வகையில் இந்த லிஸ்டில் இணைந்துள்ளார் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ்.
பிளாஸ்ட்: அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான திரைப்படம் 'பிளாஸ்ட்'. இப்படம் கடந்த மே மாதம் 28ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.
நடிகர்கள்: அர்ஜுன் உடன் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் தயாரிப்பில் கேஜிஎஃப் பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரவி பஸ்ரூர் அறிமுகமாகியுள்ளார்.
கதை என்ன? நீண்ட நாட்களுக்கு பின் ஆக்சனில் களமிறங்கியுள்ளார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். தற்காப்பு கலையில் சிறந்து விளங்குகிறார் அர்ஜுன். இவர் தனது மகளுக்கும் சிறுவயதில் இருந்தே தற்காப்பு கலை பயிற்றுவிக்கிறார். இதனால் அர்ஜுனின் மகள் துணிச்சல்மிக்க தைரியமான எதையும் தட்டிக்கேட்கும் பெண்ணாக வளர்க்கிறார்.
அதேபோல் அர்ஜுனின் மனைவியும் தற்காப்பு கலையில் சிறந்து விளங்குகிறார். இப்படி குடும்பமே தற்காப்பு கலையில் சிறந்து விளங்கி வரும் நிலையில் இந்த குடும்பத்துடன் ஒரு வில்லன் கும்பல் பிரச்சனை செய்கிறது. தங்களுக்கு தெரிந்து தற்காப்புக்கலை மூலம் எப்படி அர்ஜுன் குடும்பம் வில்லன் கும்பலில் இருந்து தப்பிருக்கிறது என்பதே இப்படத்தின் கதை.
வசூல்: அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம், வசூலிலும், விமர்சனத்திலும் அமோக வரவேற்பு பெற்றது. வெறும் 18 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், உலகளவில் 68 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து அசத்தியது.
ஓடிடி? தியேட்டரில் மாஸ் காட்டிய இப்படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் ஜூன் 25ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications