Home / Photos
யாரும் எதிர்பார்க்காத வசூல் வேட்டை.. 3 நாட்களில் மாஸ் காட்டும் ‘ப்ளாஸ்ட்’!
By Divya Bala
அர்ஜுன் சர்ஜா நடிப்பில் வெளியான ப்ளாஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக 3 நாள் வசூல் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
1/5
Photo Credit: Instagram
Share
அர்ஜுன் நடிப்பில் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பிளாஸ்ட் திரைப்படம் கடந்த மே 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
2/5
Photo Credit: Instagram
Share
கராத்தே பயிற்சியாளரான ராஜாராமன், தனது மனைவி நீலவேணி மற்றும் மகள் நிலாவுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு கார்ப்பரேட் கும்பலின் குறிவைக்கப்பட்டவர்களாக அவர்கள் மாறுகின்றனர்.
3/5
Photo Credit: IMDb
Share
இதனால் தனது குடும்பத்தை காப்பாற்றும் போராட்டத்தில் இறங்கும் ராஜாராமன், சாதாரண மனிதராக இருந்து அதிரடி ஹீரோவாக மாறுகிறார். குடும்ப பாசம், ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
4/5
Photo Credit: IMDb
Share
அபிராமி, ப்ரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக அர்ஜுனின் அதிரடி காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
5/5
Photo Credit: Instagram
Share
முதல் நாளில் சாதாரண ஓப்பனிங் பெற்ற பிளாஸ்ட், அடுத்தடுத்த நாட்களில் வசூலை உயர்த்தியுள்ளது. 3 நாட்கள் முடிவில் இந்திய அளவில் சுமார் ₹7.95 கோடி நெட் வசூலையும், உலகளவில் ₹13 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கவனம் ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications