தென்னிந்திய நடிகர்களை கொண்டாடும் பாலிவுட் ரசிகர்கள்.. யாரெல்லாம் பாத்தீங்களா?
தென்னிந்திய நடிகர்கள் பாலிவுட் செல்வதும், பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதையும் நாம் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுக்க ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். இதில் சில நடிகர்கள் ஜொலிக்கத் தவறியதும் உண்டு. அதேபோல் நம் தமிழ் நடிகர்கள் சிலர் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கலக்கி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்து அங்கே தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்ட நடிகர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ராஷ்மிகா: 'குட் பாய்' என்ற படத்தில் அமிதா பச்சன் உடன் நடித்து பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ராஷ்மிகா, தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியான அனிமல், சாவா, சிக்கந்தர் உள்ளிட்ட படங்கள் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெவ்வேறு பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மாதவன்: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய்யாக வலம் வந்துகொண்டிருந்த மாதவன், Rehnaa Hai Terre Dil Mein படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். பாலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்க தற்போது கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். குறிப்பாக பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் செல்வார் என ரசிகர்கள் யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம். 'மேரி கிறிஸ்துமஸ்' படத்தில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் உடன் ஜோடியக நடித்து பாலிவுட் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் வெளியான 'ஜவான்' படத்தில் வில்லன் ரோலில் நடித்து மெர்சல் செய்திருப்பார். தற்போது தமிழ் படங்களை தொடர்ந்து பாலிவுட் படங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், விஜய் சேதுபதி.
தனுஷ்: 2013ம் ஆண்டிலேயே பாலிவுட் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார், தனுஷ். Raanjhanaa என்ற படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க அப்படம் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து ஏராளமான பாலிவுட் படங்களில் நடித்து ஸ்டார் பாலிவுட் நடிகராக மாறிவிட்டார். தமிழ் மற்றும் ஹிந்தி என இருமொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நயன்தாரா: தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஓரளவுக்கு ஈர்த்த நயன், தொடர்ந்து அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
தமன்னா: தற்போது பாலிவுட் சினிமா வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார் நடிகை தமன்னா. Odela 2 என்ற தெலுங்கு படத்தில் இவர் பேசிய டயலாக் ஒன்று இந்தியளவில் பெரும் பேசுபொருளாக மாறியது, அதே சமயம் பாலிவுட் ரசிகர்களின் கவனத்தையும் அதிகம் ஈர்த்துள்ளது. தென்னிந்திய நடிகையான தமன்னா, அவ்வப்போது சில ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications