Home / Photos
PHOTOS: சூப்பர் டூப்பர் ஹிட்டான சிவகார்த்திகேயனின் மாவீரன்.. உலகளவில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
By Chandru
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக அறிமுகமாகிய மண்டேலா படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் தான் இயக்குநர் மடோன் அஸ்வின்.
1/6
Photo Credit: instagram
Share
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது மாவீரன் திரைப்படம். இப்படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு ஹீரோவாக அறிமுகமாகிய மண்டேலா படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தவர் தான் இயக்குநர் மடோன் அஸ்வின்.
2/6
Photo Credit: instagram
Share
இம்முறை சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். சிவாவுக்கு ஜோடியாக ஆதிதி ஷங்கர் நடிக்க, யோகி பாபு, மிஸ்கின், நடிகை சரிதா, மோனிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது.
3/6
Photo Credit: instagram
Share
வித்தியாசமான கதையம்சத்துடன் களம் இறங்கிய சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் கூட்டணி நினைத்ததைவிட வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இயக்குநர் மடோன் அஸ்வினின் மண்டேலா படத்தை தொடர்ந்து மாவீரன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பிரமாண்ட வெற்றியை தேடிக்கொடுத்துள்ளது.
4/6
Photo Credit: instagram
Share
ஷாந்தி டால்கிஸ் தயாரிப்பில் சுமார் 35 கோடி ரூபாய் செலவில் மாவீரன் திரைப்படம் உருவாக்கபட்டது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை சுமார் 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர்.
5/6
Photo Credit: instagram
Share
35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட மாவீரன் திரைப்படம் இன்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி படங்களை கொடுத்து ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டார்.
6/6
Photo Credit: instagram
Share
அந்தவகையில் மாவீரன் திரைப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து செய்துள்ளதாகவும். அதிலும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications