ஓடிடியில் வெளியாகும் செம ஜாலியான குடும்ப காமெடி தொடர்.. என்ன? எப்போது? பார்க்கலாம்!
செம ஜாலியாக உருவாகியுள்ள குடும்ப வெப் தொடரான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' வெப் தொடர் எப்போது? எந்த ஓடிடியில் ரிலீசாகவுள்ளது என்பதை வாங்க பார்ப்போம்.
வெப் தொடர் பிடிக்காத ஓடிடி பிரியர் உண்டோ.. திரில்லர், க்ரைம், சஸ்பென்ஸ், காமெடி என வெவ்வேறு ஜானரில் விதவிதமான தொடர்கள் வெளியாகி ஓடிடி பிரியர்களை என்டர்டைன் செய்து வருகிறது. திரைப்படங்களை விட வெப் தொடர்களே அதிக சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. அந்த வகையில் ஜாலியான காமெடி நிறைந்த குடும்ப வெப் தொடராக உருவாகியுள்ள 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' வெப் சீரிஸ் ஓடிடி பிரியர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.
2024இல் வெளிவந்த 'உப்பு புளிப்பு காரணம்' என்ற காமெடி வெப் தொடரை தயாரித்த நிறுவனம் லேட்டஸ்டாக உருவாகியுள்ள காமெடி தொடர் தான் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்'. அதேபோல் 'போலீஸ் போலீஸ்' தொடரை இயக்கிய சிதம்பரம் மணிவண்ணன் இத்தொடரை இயக்கியுள்ளார்.
படக்குழு: நடிகர் போஸ் வெங்கட், காயத்ரி சாஸ்திரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ராஜ் ஐயப்பா, நிகிலா சங்கர், லூதுப், கிஷோர், ஷ்ரவ்னிதா, புரமோதினி உள்ளிட்ட பலர் இந்த காமெடி ட்ராமா வெப் தொடரில் நடித்துள்ளனர்.
கதை? டெக்ஸ்டைல் ஷோரூம் வைத்திருக்கும் போஸ் வெங்கட், இல்லத்தரசியாக காயத்ரி சாஸ்திரி. இவர்களுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். அந்த நான்கு உடன்பிறந்தவர்கள் செய்யும் சேட்டைகளும், அவர்களின் வாழ்க்கையில் நிகழும் சுவாரசிய சம்பவங்களே இத்தொடரின் கதைக்களம்.
குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் மகிழ்ச்சியான தருணங்களை கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்தும், அதிகம் காமெடி கலந்தும் இயக்குனர் சிதம்பரம் மணிவண்ணன் இயக்கியுள்ளார். அதேபோல் இத்தொடரை பார்க்கும் பலரும் தங்களின் வாழ்க்கையில் அந்த கதையை தொடர்புபடுத்தி பார்க்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
காமெடியாக உருவாகியுள்ள 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' வெப் தொடர் வரும் மே 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீக் எண்டுக்கு ஏற்ற தரமான இந்த காமெடி ட்ராமா வெப் தொடரை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications