Home / Photos
ஆச்சரியம்! ஆனால் உண்மை! செல்போன் பயன்படுத்தாத சினிமா நடிகர்களை பற்றி கேள்விபட்டிருக்கீங்களா? சுவாரசிய லிஸ்ட் இதோ!
By Chandru
நவீன உலகத்தின் அசாத்தியமான படைப்பு செல்போன். உணவு இல்லாமல் கூட ஒருவரால் இருந்துவிட முடியும் ஆனால் செல்போன் இல்லாமல் வாய்ப்பே இல்லை என்று தான் சொல்லியாகவேண்டும்.. செல்போன் இல்லாத நபரை பார்ப்பது அரிது என்றே சொல்லலாம். உலகம் நம் உள்ளங்கையில் அடங்கும்போது யாரு தான் வேண்டாம் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த செல்போனை வேண்டாம் என்று சில திரை பிரபலங்கள் உள்ளனர் என்று சொன்னால் நம்பமுடியுதா? ஆம் செல்போனே வேண்டாம் என்று சில ஸ்டார் பிரபலங்கள் உள்ளனர்.. அந்த வகையில் யார் அந்த பிரபலங்கள் எதற்காக வேண்டாம் என்று பயன்படுத்தாமல் இருக்கின்றனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: IMDB
Share
சாரா ஜெசிகா பார்க்கர்: பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகை சாரா ஜெசிகா பார்க்கர், செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டாராம். செல்போன் பயன்பட்டால் கவனம் செதறுதல் போன்ற பிரச்னை காரணத்தால் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திக்கொண்டாராம். ஸ்டார் நடிகையாக இருந்தும் போன் இல்லை என்பது ஆச்சரியமே.
2/5
Share
கிறிஸ்டோபர் வால்கன்: Batman Returns, Catch Me If You Can போன்ற படங்களை இயக்கி ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் வால்கன், செல்போன் பயன்படுத்துவது இல்லையாம். அதன் மேல் நாட்டம் இல்லாததால் இன்று வரை செல்போன் மற்றும் கம்பியூட்டர் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார்.
3/5
Photo Credit: IMDB
Share
சைமன் கோவல்: ஹாலிவுட் சினிமாவில் முன்னணி இசைக் கலைஞராக வலம் வருபவர் சைமன் கோவல். செல்போன் பயன்படுத்துவதால் ஆர்வம் இல்லாததாலும், இதனால் மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வருவதாலும் இவர் இன்று வரை செல்போன் பயன்படுத்தாமல் இருந்து வருகிறார்.
4/5
Photo Credit: filmibeat
Share
டாம் க்ரூஸ்: ஹாலிவுட் சினிமாவின் உச்சப்பட்ட நடிகராக வலம் வருபவர் டாம் க்ரூஸ். உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள இவர் செல்போன் வைத்துக்கொள்ள விரும்பவில்லையாம்.
5/5
Photo Credit: instagram
Share
ஜூஸ்டின் பீபர்: பிரபல பாப் பாடகர் ஜூஸ்டின் பீபர், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். இசையில் அதிகம் ஆர்வம் உடைய இவர் செல்போன் பயன்பாட்டை விரும்புவதில்லை என்று கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications