Home / Photos
சூப்பர் ஸ்டார் கன்னத்தில் முத்தம் கொடுத்த பிரபல சமையல் கலைஞர்.. அடடே அந்த சந்தோஷத்த பாத்தீங்களா? போட்டோஸ்!
By Chandru
பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட், சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
1/4
Photo Credit: instagram@Venkatesh Bhat
Share
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஜட்ஜாக பங்கேற்று பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் வெங்கடேஷ் பட். அந்நிகழ்ச்சியில் கோமாளிகளை வம்புக்கு இழுப்பதும், அவர்களை செல்லமாக அடிப்பதும் என செட்டில் வெங்கடேஷ் பட் செய்யும் சேட்டைகள் தான் அவரை மிகவும் பாப்புலராகியது.
2/4
Photo Credit: instagram@Venkatesh Bhat
Share
குக் வித் கோமாளி இவரை மிகவும் பிரபலமாகியது மட்டுமல்லாமல் இவருக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது. காரணம், வெங்கடேஷின் இன்னசென்ட் சேட்டைகள் தான். விஜய் டிவியை தொடர்ந்து அதற்கு போட்டியாக சன் டிவியில் ஒளிபரப்பான 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சிக்கு தாவினார்.
3/4
Photo Credit: instagram@Venkatesh Bhat
Share
விஜய் டிவியில் இருந்த வெங்கடேஷ் பட் சன் டிவி நிகழ்ச்சிக்கு தாவி பலருக்கும் ஷாக் கொடுத்தார். இருப்பினும் தனது எதார்த்தத்தில் இருந்து கொஞ்சமும் மாறாமல் ஃபேன்ஸ் கூட்டத்தை மகிழ்வித்து வந்தார். உண்மையில் வெங்கடேஷ் பட் இந்தியாவின் டாப் சமையல் கலைஞர்களில் ஒருவர். பல முன்னை பிரபலங்களுக்கு சமைத்து கொடுத்துள்ளார். ஏன்? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் அவருக்கு பிடித்த வகையில் சமைத்து கொடுத்துள்ளாராம்.
4/4
Photo Credit: instagram@Venkatesh Bhat
Share
இந்த நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான வெங்கடேஷ் பட், அவரை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். ரஜினியின் மீது கொண்ட அதீத அன்பினால் அவரின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இவரின் போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications