Home / Photos
PHOTOS: கமல், ரஜினி பட நாயகி ரூபிணியை நியாபகம் இருக்கா? ஆளே அடையாளம் தெரியாமல் டோட்டலா மாறிட்டாங்களே!
By Chandru
90s actress rupini latest family photos gets trending on social media. check out her latest pics here.
1/8
Share
90ஸ் நாயகி ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது ரூபிணியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் தீயாக பரவி வருகிறது.
2/8
Share
80ஸ் மற்றும் 90ஸ் நடிகைகள் தற்போது எப்படி இருக்கிறார்கள், படத்தில் நடிக்கின்றனரா? இல்லையா? என்ற ஆர்வம் ரசிகர்கள் அனைவர்க்கும் இருக்கும். அந்தவகையில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரூபிணி.
3/8
Share
கடந்த 1987ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான கூலிக்காரன் என்ற படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரூபிணி. தொடர்ந்து நினைக்க தெரிந்த மனமே, தீர்த்த கரையினிலே, ரஜினியின் மனிதன் என அடுத்தடுத்த படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வர தொடங்கினார்.
4/8
Share
அதன்பின்னர் கமல்ஹாசன் நடித்த அபூர்வ சகோதரர்கள், சத்யராஜுடன் உலகம் பிறந்தது எனக்காக, பார்த்திபன் நடிப்பில் தாலாட்டு பாடவா, மீண்டும் நடிகர் கமலுடன் மைக்கேல் மதன காம ராஜன் என தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
5/8
Share
தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக ரூபிணி நடித்துள்ளார். திரையில் ஜொலித்த ரூபிணி திடீரென திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியம் ஆகிவிட்டார்.
6/8
Share
கடந்த 1995ம் ஆண்டு மோகன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷா ரயானா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய ரூபிணி குடும்ப வாழக்கையை என்ஜாய் செய்து வந்தார்.
7/8
Share
அதேசமயம் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்க ஆரம்பித்தார். தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து இணையவாசிகளை ஈர்த்து வருகிறார்.
8/8
Share
அந்தவகையில் 90ஸ் நாயகி ரூபிணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சோசியல் மீடியாக்களில் ஏகப்பட்ட லைகளுடன் தீயாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications