கைதி படத்தில் நடித்த பாப்பாவா இது? இப்போ ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிட்டாங்களே? போட்டோ பாத்தீங்களா?
லோகேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த 'கைதி' படத்தில் கார்த்தியின் மகளாக பேபி மோனிகா நடித்திருப்பார். தற்போது இவரின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகியுள்ளது.
அஜித் நடிப்பில் 2014ல் வெளிவந்த 'வீரம்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் பேபி மோனிகா. அதனை தொடர்ந்து வேதாளம், பைரவா, ராட்சசன், கைதி ஆகிய படத்தில் குழந்தை ரோலில் நடித்து மக்களின் கவனம் ஈர்த்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்த பேபி மோனிகா, மலையாள ஸ்டார் நடிகர் மம்மூட்டியுடனும் நடித்துள்ளார்.
தமிழில் இவர் இறுதியாக நடித்த படம் லோகேஷ் இயக்கிய 'கைதி' திரைப்படமாகும். கார்த்திக்கு மகளாக பேபி மோனிகா நடித்துள்ளார். இவரின் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
பல படங்களில் குழந்தை ரோலில் நடித்து வந்த பேபி மோனிகா, தற்போது ஹீரோயின் ரோலுக்கு தயாராகிவிட்டார் போல் தெரிகிறது.
குட்டி சுட்டி பெண்ணாக இருந்த பேபி மோனிகா, மாடர்ன் உடையில் ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறிவிட்டார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் இவர், அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இவர், மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கைதி பட பாப்பாவா இது? என நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் புகைப்படங்களுக்கு லைக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications