Home / Photos
PHOTOS: அஜித்தின் 'வீரம்' படத்தில் வரும் கியூட் குழந்தையை நியாபகம் இருக்கா? நெடுநெடுனு வளர்ந்து இப்போ ஆளே மாறிட்டாங்களே!
By Chandru
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகர்களாக பலர் இருக்கின்றனர். அந்தவகையில். சின்னத்திரை மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை யுவினா பார்த்தவி. தனது கியூட்டான நடிப்பின் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் நடிகர்களாக பலர் இருக்கின்றனர். அந்தவகையில். சின்னத்திரை மூலம் சினிமாவுக்குள் அறிமுகமானவர் நடிகை யுவினா பார்த்தவி. தனது கியூட்டான நடிப்பின் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்.
2/7
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் பிரபலமானதால் வெள்ளித்திரையில் யுவினாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து. கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான 'இவன் வேறமாதிரி' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
3/7
Photo Credit: instagram
Share
இப்படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது படமே அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிட்டியது. இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித், தமன்னா, நாசர், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வீரம்' . இப்படத்தில் நடிகர் நாசருக்கு பேத்தியாக யுவினா நடித்திருப்பார்.
4/7
Photo Credit: instagram
Share
முதல் படத்தை போல் இல்லாமல் இப்படத்தில் யுவினா செம கியூட்டாக நடித்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். சொல்லப்போனால் யுவினாவுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு கட்சிகளும் எடுக்கப்பட்டது.
5/7
Photo Credit: instagram
Share
அதுவும் அஜித்துடனான இவரது காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தை தொடர்ந்து விமல் நடித்த மஞ்சப்பை, சுந்தர் சி இயக்கி-நடித்த அரண்மனை, விஜய்யுடன் கத்தி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் யுவினா நடித்துவந்தார்.
6/7
Photo Credit: instagram
Share
மேலும் அதேபோல் சூர்யாவுக்கு மகளாக மாசு என்கிற மாசிலாமணி திரைப்படத்தில் நடித்திருப்பார். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளிலும் கலக்கி வருகிறார். தமிழில் யுவினா நடித்த கடைசி படம் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படமாகும்.
7/7
Photo Credit: instagram
Share
தற்போது போதிய அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் யுவினா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது 14 வயதே ஆகும் யுவனா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் யுவினாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications