Home / Photos
PHOTOS : புன்னகை அரசி சினேகாவின் சிறு வயது புகைப்படத்தை பாத்திருக்கிங்களா?.. எவ்வளவு அழகா இருக்காங்கன்னு பாருங்களேன்!
By Chandru
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சினேகா, பின்னர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
1/8
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சினேகா. மலையாள சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான சினேகா, பின்னர் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/8
Photo Credit: instagram
Share
சினேகாவுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கமல், அஜித், விஜய், விக்ரம், சிம்பு என்று தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
3/8
Photo Credit: instagram
Share
ஒரு சமயத்தில் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சினேகாவுக்கு தமிழில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவானது. தொடர்ந்து தமிழில் ஹிட் படங்களை கொடுத்த சினேகா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியான நடிகையாக வலம் வந்தார்.
4/8
Photo Credit: instagram
Share
தமிழில் ஏகப்பட்ட ஹாட் படங்களை கொடுத்த சினேகா, 'அச்சமுண்டு அச்சுமுண்டு' என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பின் பொது இவர்களிடையே காதல் மலர தொடங்கியது.
5/8
Photo Credit: instagram
Share
இருவரும் சீரியசாக காதலிக்க 2012ல் பெற்றோர் சம்மதத்துடன் இவர்களது திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு தற்பொழுது ஆத்யந்தா, விஹான் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பின் சில காலங்கள் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்தார் சினேகா.
6/8
Photo Credit: instagram
Share
பின்னர் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த சினேகா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் பிற மொழி திரைப்படங்கள் தான் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
7/8
Photo Credit: instagram
Share
இந்தநிலையில் சமீபகாலமாக நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர் நடிகை சினேகா.
8/8
Photo Credit: instagram
Share
குழந்தைகள் மற்றும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்யும் சினேகா, சமீபத்தில் தனது சிறு வயது புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் சினேகாவின் இந்த சிறு வயது புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் ஏகப்பட்ட லைக்குகளுடன் செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications