Home / Photos
டீன் ஏஜ் வயதில் மிக பெரிய ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு.. சான்ஸை கப்புன்னு பிடுச்சுகிட்ட பிரபலத்தின் மகள்.. யார்?
By Chandru
விஜய் நடிக்கும் GOAT படத்தில் பிரபலத்தின் டீன் ஏஜ் மகள் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/7
Share
தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் கோட். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபலத்தின் டீன் ஏஜ் வயது மகள் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2/7
Share
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் GOAT. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்திரி ஹீரோயினாக நடித்து வருகிறார்.
3/7
Share
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்றது. அதன்பின்னர் புதுச்சேரியில் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது விஜய் தனது ரசிகர்களை சந்தித்து தனது ஸ்டைலில் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
4/7
Share
புதுச்சேரியில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்திலும் நடித்து முடித்துவிட்டு அரசியலில் இறங்கிவிடுவேன் இனி படங்களில் நடிகைமேட்டேன் என விஜய் அறிக்கை விட்டு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்தார். இருப்பினும் அரசியலில் பாத்துக்கலாம் தலைவா என ரசிகர்கள் தங்களை தாங்களே சமாதானம் செய்துகொண்டனர்.
5/7
Share
GOAT படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவரும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆதாவது இப்படத்தில் பிரபலத்தின் டீன் ஏஜ் வயது மகள் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
6/7
Share
விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் மணிகண்டன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது இவரின் மகள் அபியுக்தா GOAT படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
7/7
Share
விஜய்யுடனே பயணிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் அபியுக்தா நடித்து வருவதாகவும், இவர் சுமார் 15 நாட்களுக்கு மேலாக விஜய்யுடன் பயணித்து வருவதாகவும் கூறுகின்றனர். தற்போது அபியுக்தாவின் போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications