அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்து.. திருச்சி மேற்கு தொகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.. போட்டோஸ்!
திருச்சி மேற்கு தொகுதியில் நடந்து சென்று அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் நேற்று தனது தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
திருவாரூரை தொடர்ந்து நேற்று இரவு திருச்சி வந்தடைந்த முதல்வர் ஸ்டாலின், இன்று புதன்கிழமை (1.4.2026) காலை திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின், பொதுமக்களுடன் உரையாடி அமைச்சர் கே.என். நேருவை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் கேஎன் நேருவும் நடைப்பயிற்சி மேற்கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் திருச்சி மேற்கு தொகுதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
அங்குள்ள தேநீர் கடைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் கேஎன் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோருடன் தேநீர் அருந்தினார்.
அமைச்சர் கேஎன் நேருவை ஆதரித்து நடந்து சென்று வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பொதுமக்கள் பலர் முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் கே.என். நேருவுக்கும் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


Click it and Unblock the Notifications