Home / Photos
ஓடும் பேருந்தில் இருந்து கை நழுவி ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய கல்லூரி மாணவன்..! பதைபதைக்கும் வீடியோ காட்சி!
By Chandru
வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்த வீடியோ காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
1/8
Share
வேலூரில் பேருந்தில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த கல்லூரி மாணவன் கை நழுவி கீழே விழுந்த வீடியோ காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
2/8
Share
வேலூர் மாவட்டம் தொரைப்பாடியில் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் காட்பாடியிலிருந்து செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்தனர்.
3/8
Share
அரசு பேருந்தில் சில மாணவர்கள் ஆபத்தான வகையில் பேருந்தின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி பயணித்தனர்.
4/8
Share
அரசு பேருந்தை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துள்ளனர்.
5/8
Share
அப்பொழுது அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களில் ஒருவன் முதலில் தனது காலணிகளை தவறவிட்டான்.
6/8
Share
அரசு பேருந்து சிறுது தூரம் சென்ற பின் அந்த மாணவன் ஜன்னல் கம்பியில் இருந்து கை நழுவி கண்ணிமைக்கு நேரத்தில் கீழே விழுந்தான்.
7/8
Share
மேலும் அந்த நேரம் பார்த்து பெரிய வாகனங்கள் எதுவும் வராததால் மாணவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.
8/8
Share
இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நிலையில் தற்போது வைரலாக வலம் வருகிறது.


Click it and Unblock the Notifications