Home / Photos
PHOTOS: கோடிகளில் சம்பளம்.. யோகி பாபுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ..
By Chandru
தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது யோகி பாபுவின் சொத்து பாதிப்பு குறித்த தகவல் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
1/7
Photo Credit: instagram
Share
தமிழ் சினிமாவின் டாப் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. தற்போது யோகி பாபுவின் சொத்து பாதிப்பு குறித்த தகவல் சோசியல் மீடியாக்களில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/7
Photo Credit: instagram
Share
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் யோகி பாபு. இப்படத்தை தொடர்ந்து சிரித்தாள் ரசிப்பேன், பையா, தில்லாலங்கடி உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களின் மூலம் பார்வையாளர்களை ஈர்க்க தொடங்கினார்.
3/7
Photo Credit: instagram
Share
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படத்தில் யோகி பாபுவின் காமெடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச் ஆனது. குறிப்பாக எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல என்ற காமெடி டயலாக் பட்டித்தொட்டி எங்கும் பரவி யோகி பாபுவை சுற்றி ஒளிவட்டம் ஒளிர தொடங்கியது.
4/7
Photo Credit: instagram
Share
சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை யோகி பாபுவின் காமெடியை ரசிக்க தொடங்கினர். பின்னர் என்ன யோகி பாபுவுக்கு ஏறுமுகம் தான்.. தொடர்ந்து அஜித், விஜய், தனுஷ், ரஜினி, சூர்யா என தமிழ் சினிமாவில் உள்ள அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார்.
5/7
Photo Credit: instagram
Share
இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவான் வடிவேலு மற்றும் விவேக் இவர்களின் வெற்றிடத்தை நிரப்பியவர்களில் யோகி பாபுவும் ஒருவர். அதே சமயம் சந்தானம், சூரி ஆகியோர் காமெடியனாக இருந்து தற்போது ஹீரோக்களாக நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது யோகி பாபு அவர்கள் இல்லாத குறையையும் சிங்கிள் ஆளாக நிரப்பி வருகிறார்.
6/7
Photo Credit: instagram
Share
அது மட்டுமில்லாமல் ஹீரோவாககும் யோகி பாபு சில படங்களில் நடித்துள்ளார். தர்ம பிரபு, மண்டேலா, பொம்மை நாயகி, ட்ரிப் போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி காமெடி மட்டும் இல்லை குணச்சித்திரமாகவும் நடிக்க தெரியும் என்று ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார்.
7/7
Photo Credit: instagram
Share
தற்போது தமிழ் சினிமாவின் பிஸி காமெடி நடிகனாக கையில் ஏகப்பட்ட படங்களுடன் இருக்கும் யோகி பாபுவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் யோகி பாபுவின் சொத்து மதிப்பு சுமார் 40 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்ற தகவல் வெளியாகி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications