Home / Photos
தம்பி போங்க தம்பி நாங்க பாக்காத ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரா...! வைகைப்புயல் வடிவேலு ரிட்டன்ஸ் அஸ் நாய் சேகர்...! இணையத்தை கலக்கும் நாய் சேகர் போஸ்டர்!
By Chandru
காமெடி ஜாம்பவான் நடிகர் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை முடக்கம் செய்யும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.
1/10
Share
காமெடி ஜாம்பவான் நடிகர் வடிவேலு நடிக்கும் நாய் சேகர் படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தை முடக்கம் செய்யும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
2/10
Share
நடிகர் வடிவேலு உடல் மொழியாலும் நகைச்சுசுவையான வசனங்களாலும் பல கோடி தமிழ் மக்களின் மனதில் வைகை புயலாக மையம் கொண்டவர்.
3/10
Share
வடிவேலு இன்றும் சமூக வலை தளங்களில் வலம் வரும் மீம் கிரியேட்டர்கள் அனைவருக்கும் கடவுளாக தோன்றுகிறார்.
4/10
Share
வடிவேலு கடைசியாக இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
5/10
Share
வைகைப்புயல் வடிவேலுவை மீண்டும் திரையில் காண பலகோடி தமிழ் ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள்.ஆனால் இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தினால் சில காரணங்களால் வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
6/10
Share
மேலும் நீண்ட கால இடைவெளிக்கு பின் சமீபத்தில் வடிவேலுவின் மீது இருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் வடிவேலு தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்புகளும் வெளியானது.
7/10
Share
இந்நிலையில் முன்னதாக இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர்.C நடித்த தலைநகரம் படத்தில் ரசகர்களின் ஃபேவரட்டான வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தை பெயராக கொண்ட நாய் சேகர் திரைப்படம் தயாராக உள்ளதாக சுராஜ் அறிவித்திருந்தார்.
8/10
Share
இந்நிலையில் இன்று லைகா புரோடக்சன் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
9/10
Share
மேலும் வைகை புயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications