இந்திய ரூபாயை நேரடியாக ஏற்றுக்கொள்ளும் நாடுகள்? எங்கெல்லாம் தெரியுமா?
இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்ளும் நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது தங்களின் செலவுக்காக அந்நாட்டின் பணத்தை பெற மணி எக்ஸ்சேஞ் மூலம் இந்திய ரூபாயை கொடுத்து அந்நாட்டின் பணத்தை பெறுவது வழக்கம். ஆனால் சில நாடுகள் இந்திய ரூபாயை அப்படியே ஏற்றுக்கொள்கிறதாம். இந்திய ரூபாயை பயன்படுத்தி தங்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம் என கூறுகின்றனர். அந்த வகையில் எந்தெந்த நாடுகளில் இந்திய ரூபாயை நேரடியாக பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள சில இந்திய வணிகர்கள் இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வார்களாம். ஆனால் எமிரேட்ஸின் அனைத்து இடங்களுக்கும் இது பொருந்தாது. இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் பயன்படுத்தும் பணத்தை மாற்றிக்கொள்வது நல்லது.
இலங்கை: சுற்றுலா நாடான இலங்கையில் சில இடங்களில் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறதாம். கொழும்பு, கண்டி ஆகிய சுற்றுலா தலங்களில் இந்திய ரூபாய் பயன்படுத்தி நமக்கு தேவையானவைகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதேபோல் போக்குவரத்துக்கு, ஹோட்டல்களில் இந்திய ரூபாய் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இந்தோனேசியா: சுற்றுலாவாசிகளை அதிகம் ஈர்க்கும் நாடாக இந்தோனேசியா உள்ளது. குறிப்பாக பாலி சுற்றுலாத்தலத்தில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் ஒன்றுகூடுவர். அங்கு குறிப்பிட்ட சில ஹோட்டல், சந்தைகளில் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறதாம்.
சிங்கப்பூர்: இந்தியர்களின் பிரபல சுற்றுலாத்தலங்களில் ஒன்று சிங்கப்பூர். அங்குள்ள சில கடைகள், ஹோட்டல்களில் இந்திய ரூபாய் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகிறதாம்.
பூட்டான்: பூட்டான் பணத்திற்கு இணையான மதிப்புமிக்க பணம் இந்திய ரூபாய். இதனால் பூட்டானின் அனைத்து பகுதிகளிலும் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நேபாளம்: நேபாளத்தின் ஹோட்டல்கள், போக்குவரத்துக்கு, சந்தைகளில் இந்திய ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.


Click it and Unblock the Notifications