கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் காதல் ஜோடி.. ஓடிடியில் பட்டைய கிளப்பும் மிருணாள் தாகூரின் 'டகோயிட்'.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
மிருணாள் தாகூர் நடிப்பில் வெளிவந்த 'டகோயிட்' திரைப்படம் ஓடிடியில் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது. வாங்க படத்தின் கதை என்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டகோயிட்: ஷெனில் தியோ இயக்கத்தில் மிருணாள் தாகூர், அதிவி சேஷ் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் 'டகோயிட்'. மேலும் பிரகாஷ் ராஜ், அதுல் குல்கர்னி, ஐயான் மரியா கான் உள்ளிட்ட பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கதை என்ன? மிருணாள் தாகூர்-அதிவி சேஷ் இருவரும் காதலித்து வருகின்றனர். இதில், ஹீரோ அதிவி சேஷ் ஒரு குற்ற சம்பவத்தில் சிக்கி சிறைக்கு செல்கிறார். தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க சிறையில் இருந்து தப்பித்து வெளியேறி காதலி மிருணாள் தாகூரை சந்திக்கிறார்.
விறுவிறுப்பு: தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க போராடும் அதிவி சேஷ், அதேசமயம் காதலியுடன் சேர்ந்த சில கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபடுகிறார். இருவரும் சேர்ந்த ஏன் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்? தான் குற்றமற்றவன் என அதிவி சேஷ் நிரூபித்தாரா? என்பதே படத்தின் விறுவிறுப்பான திரில்லர் கதைக்களம்.
சுமார்: தியேட்டரில் ரிலீசான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று டீசெண்டான பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெற்றது. தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் 'டகோயிட்' திரைப்படம் வெளியானது.
ஓடிடி: கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி தியட்டரில் ரிலீசான இப்படம், ஒரு மாதத்திற்கு பின் கடந்த மே 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸான இப்படம், அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து டாப் ட்ரெண்டிங் திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்து வருகிறது. ஹிந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. மக்களே விறுவிறுப்பு நிறைந்த இந்த திரில்லர் படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications