தீபாவளிக்கு சரவெடியாய் வெடிக்கப்போகும் இளம் ஹீரோக்களின் திரைப்படங்கள்.. என்னென்ன?
தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான்.. ஸ்டார் நடிகர்களின் படங்கள் ரிலீசாகும், விடுமுறையை ஜாலியாக என்ஜாய் பண்ணலாம் என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகாத நிலையில் இளம் ஹீரோக்கள் களமிறங்கியுள்ளனர். தீபாவளி ட்ரீட்டாக தியேட்டரில் ரிலீசாகும் இளம் ஹீரோக்களின் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய்யின் 'யூத்' படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான நட்டி என்னும் நட்ராஜ், சதுரங்கவேட்டை, கர்ணன், மகாராஜா ஆகிய படங்களின் மூலம் அசத்தல் நடிகராக தன்னை நிரூபித்துக்காட்டினார். ரசிகர்களிடைய அமோக வரவேற்பும் பெற்றார். இவர், அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் 'கம்பி கட்ன கதை' படத்தில் நடித்துள்ளார். இவருடன், சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு வரும் 17ம் தேதி ரிலீசாகவுள்ளது.
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டீசல்'. ஹரிஷுக்கு ஜோடியாக நடிகரை அதுல்யா நடித்துள்ளார். மேலும் கருணாஸ், வினய், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன், திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் வரும் 17ம் தேதி ரிலீசாகவுள்ளது.
தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன், தற்போது அறிமுக இயக்குநர் கிரித்தீஸ்வரன் இயக்கத்தில் 'டியூட்' படத்தில் நடித்துள்ளார். மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரொமான்டிக்கான காதல், எமோஷனல் நிறைந்த கதைக்களமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 17ம் தேதி ரிலீசாகவுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பைசன்'. துருவ் உடன் அனுபமா பரமேஸ்வரன், பசுபதி, ராஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கபடி வீரரின் வாழ்க்கை அதனை சுற்றி நடக்கும் அரசியல் கதைக்களத்தை பற்றிய படமாகும். இப்படம் வரும் 17ம் தேதி ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications