தனுஷின் 'கர' படம் கலக்கியதா? 5 நாள் வசூல் என்ன?
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கர' திரைப்படம் 5 நாட்களில் எவ்வளவு வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தனுஷ்: தனுஷ் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் 'இட்லி கடை'. எதிர்ப்புடன் வெளியான அப்படம் சுமாரான வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'கர'.
ஹிட் இயக்குநர்: க்ரைம், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்து மெகா ஹிட்டான திரைப்படம் 'போர் தொழில்'. அப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தான் 'கர'. போர் தொழில் வெற்றியை தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி வைத்துள்ளார்.
நடிகர்கள்: தனுஷுடன் மமிதா பைஜூ, கேஎஸ் ரவிக்குமார், மலையாள நடிகர் சுராஜ், கருணாஸ், ஜெயராம், சைத்ரா ஜே ஆச்சார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கூட்டணி: இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் முதல்படம் செம ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது படம் தனுஷுடன் என்பதால் படத்தின் மீது செம எதிர்பார்ப்பு இருந்தது.
கதை? திருடனாக இருக்கும் கர என்ற தனுஷ் போலீசிடம் இருந்து தப்பிக்க தனது மனைவி மமிதா பைஜுவுடன் ஆந்திராவுக்கு தப்பி செல்கிறார். சொந்தமாக தொழில் தொடங்கி நிம்மதியாக வாழ்ந்து வரும் தனுஷுக்கு அவசர தேவையாக பணம் தேவைப்படுகிறது. இதனால் வங்கிக்கு செல்கிறார். வங்கி லோன் கொடுக்க மறுத்த நிலையில் சொந்த ஊரில் உள்ள நிலத்தை விற்க முடிவு செய்ய சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன? என்பதே படத்தின் மீது சுவாரசிய கதைக்களம்.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவான 'கர', கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தியேட்டரில் ரிலீசானது. ஆரம்பத்தில் சூடுபிடித்து படம், போக போக சுமாரான வசூலை பெற்று வருகிறது.
வசூல்? அதன்படி 'கர' திரைப்படம் கடந்த 5 நாட்களில் வெறும் 39.5 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இப்படம், இதுவரை சுமாரான வசூலை மட்டுமே பெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் படத்தின் கலெக்ஷன் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications