Home / Photos
தனுஷின் 'கர' வெற்றியா? தோல்வியா? இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?
By Chandru
தனுஷ் நடிப்பில் வெளிவந்த 'கர' திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவுக்கு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: filmibeat
Share
தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'கர'. போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
2/6
Photo Credit: filmibeat
Share
தனுஷ்-விக்னேஷ் ராஜா கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். காரணம் விக்னேஷ் ராஜாவின் போர் தொழில் திரைப்படம் தான். அப்படம் விமர்சனத்திலும், வசூலிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
3/6
Photo Credit: filmibeat
Share
த்ரில் ஜானரில் மாபெரும் வெற்றி பெற்ற 'போர் தொழில்' படத்தை தொடர்ந்து அதே ஜானரில் 'கர' படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர். எதிர்பார்ப்புடன் வெளியான 'கர' விமர்சனத்தில் அடிவாங்கியது. ஆரம்பத்தில் சூடுபிடிக்க தொடங்கிய நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கவே அடிவாங்க தொடங்கியது.
4/6
Photo Credit: filmibeat
Share
மேலும் தேர்தல் நேரத்தில் படம் ரிலீசானதால் வசூலும் பெருசா இல்லை என கூறப்படுகிறது. வங்கி கொள்ளை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட த்ரில்லர் படமாகும்.
5/6
Photo Credit: filmibeat
Share
90 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம், இதுவரை 55 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து புது புது படங்கள் தியேட்டரில் ரிலீசாகி வரும் நிலையில் 'கர' படத்தின் வசூல் மந்தமாகியுள்ளது.
6/6
Photo Credit: filmibeat
Share
ஏற்கனவே தனுஷ் இயக்கி, நடித்த 'இட்லி கடை' வசூலில் சொதப்பியதால் 'கர' ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் விமர்சனத்தில் சுமார், வசூலில் பிளாப் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications