பாகுபலி, புஷ்பா படங்களை பின்னுக்கு தள்ளிய துரந்தர் 2.. 24 நாட்களில் செய்த வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?
ரன்வீர் சிங் நடிப்பில் வெளிவந்த 'துரந்தர் 2' திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
துரந்தர்: பாலிவுட் இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், அக்சய் கண்ணா, சாரா அர்ஜுன், மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த திரைப்படம் துரந்தர்.
1000 கோடி கிளப்: உலகம் முழுவதும் ரிலீசான துரந்தர், விமர்சனத்திலும், வசூலிலும் செம ஹிட்டானது. உலகளவில் சுமார் 1350 கோடி ரூபாய் வசூல் செய்து 1000 கோடி கிளப் படங்களின் வரிசையில் துரந்தர் படமும் இடம் பிடித்தது.
பாகம் 2: முதல் பாகம் மெகா ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது பாகமாக 'துரந்தர் தி ரிவெஞ்' பெரும் எதிர்பார்ப்புடன் ரிலீசானது. பாகிஸ்தானில் உள்ள இந்திய உளவாளியை பற்றிய இப்படம், கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி முதல் பாகத்தை விட அதிகப்படியான சினிமா ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கியது.
டைமிங்: அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பு குறையாத இப்படத்தின் டைமிங் 3 மணி 49 நிமிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக நேரம் இருப்பினும் சுவாரசியம் குறையாமல் ஆடியன்ஸை கட்டிப்போட்டது.
எதிர்பார்ப்பு: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீசான இப்படம் முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தியது. முதல் பாகம் 1350 கோடி ரூபாய் வசூல் செய்ததை தொடர்ந்து இரண்டாவது பாகம் 2000 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
மெகா வசூல்: அந்த வகையில் துரந்தர் தி ரிவெஞ் ரிலீசாகி 24 நாட்களில் உலகளவில் சுமார் 1,712 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் கொடுத்துள்ளது. இந்தியளவில் 1,297 கோடியும், வெளிநாடுகளில் ரூ.415 கோடியும் வசூல் செய்துள்ளது. தொடர்ந்து தியேட்டரில் வெற்றிநடைபோடும் 'துரந்தர் தி ரிவெஞ்' ரூ.2000 கோடியை வசூல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் புதிய சாதனையும் படைத்துள்ளது.
சாதனை: பாகுபலி 2 இந்தியளவில் ரூ.1,080 கோடியும், புஷ்பா 2 வெளிநாடுகளில் ரூ.271 கோடியும் வசூல் செய்திருந்த நிலையில் அந்த இரு படங்களின் வசூலையும் துரந்தர் 2 முறையடித்து புது சாதனை படைத்துள்ளது. அதேபோல் இனி வரும் வாரங்களில் துரந்தர் 2 ரூ.2000 கோடி வசூல் செய்தால் இந்தியளவில் அதிகம் வசூல் செய்த நம்பர் 2 படமாக பார்க்கப்படும்.


Click it and Unblock the Notifications